உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

  • மறைமலையம் – 11

போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித்தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துகள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நான் மாற்றங்களை யெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள். அத் தவமகள் அடிச்சுவட்டை அன்புச்சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மை போலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்துவாழும் இளைய மறைமலையடிகள் இன்று பல்கி வருப. ஆதலின் தமிழ் தனித்தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம்.

தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும் மறைமலையடிகள் தனித்தமிழில் வீரநெஞ்சினர் ஆயினும் வடமொழியில் ஈர நெஞ்சினர்; அதன் பெருமையை நன்கு கற்று அறிந்தவர்; சாகுந்தல நாடகத்தில் தனிப்பற்றுக் கொண்டவர்; அதனை மொழி பெயர்த்ததோடு தனி ஆய்வு எழுதியவர்; அதனால் அன்றோ தவத்திரு காஞ்சி காமகோடிப் பெருமகனார் அடிகளின் மொழிபெயர்ப்புச் சாகுந்தலத்திற்குப் பரிசுதரும் அறக் கட்ட ளை வகுத்தருளினார். இவ்வொப்புதல் ஒன்றே அடிகளின் வடமொழியன்புக்குச் சாலும் கரியாகும்.

வ.சுப.மாணிக்கனார்.

மயிலையில் ஒரு சிற்பியார். அவர்க்கு இன்ன இன்ன திருவுருவங்கள் விரைவில் வார்க்க நினைவாய் இருக்கிறது என ஓர் அட்டை எழுதினார். அடிகள். எழுதும்போது இளவழகனார் உடனிருந்தார். சிற்பியை வரும்படி இதில் எழுதவில்லையே என்றார். வரும்படிஇதில் அடிகளார் அந்த அஞ்சல் அட்டையின் கருத்து அதுதான் என்றும், வெளிப்படையாக எழுதக்கூடாது என்றும் ஒருவர் மற்றொரு வர்க்குக் கட்டளையிட வாய்ப்பில்லை என்றும் உரிமையால் ஒழுக வழி செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடிகளின் உரிமை மதிப்பு இதனால் புலப்படும். - இளவழகனார்.

விரித்தது தொகுத்தல் என்னும் உத்தி பற்றித் தமது சொற்பொழிவில் விரித்து ஓதப்பட்ட பொருள்கள் யாவற்றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/261&oldid=1580218" இலிருந்து மீள்விக்கப்பட்டது