உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

11

மறைமலையம் – 11

கடலாம் மறைமலையடிகளின் மாண்பையும்அவர் இயற்றியுள்ள நூல்களின் பெருமையையும் சொல்லிவிட முடியாது.

-தொழிற்செல்வர் நா.மகாலிங்கம்.

தமிழ் என்றாலே தாழ்வு என்றே கொண்டு தமது மொழியின் தகுதி மறந்து தாழ்வுற்ற தமிழகத்தில் தமிழ் ஒன்றே உயர்வு அன்றியும் தனித்தமிழே நனியுயர்வு என்று உளங்கொண்டு தமது எழுத்திலும் பேச்சிலும் நாளும் தனித்தமிழின் கனிச்சுவை காட்டி, நாடெங்கும் நல்ல தமிழ் வலம் வரச் செய்த தனிப்பெருமை பூண்டவர் அடிகளார்.

- பேராசிரியர் க. அன்பழகனார்.

சாதி வேறுபாடற்ற தமிழ்ச் சமுதாயம் காணப் பாடுபட்டு ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற நெறியில் தமிழரை ஆற்றுப்படுத்திய அடிகளாரின் புகழ் என்றென்றும் வையத்து வாழும் என்பது உறுதி.

பேரா.அ.மு.பரமசிவானந்தம்

6.

ஆசிரியர் மறைமலையடிகள் தமிழ் விடுதலைக்காக ‘தமிழ்மொழி’, ‘தமிழ்நெறி’ தோன்றிய தமிழ் ஞாயிறு ஆவார். மிக அமைதியாய் இவ் விடுதலைப் புரட்சியைத் தமது புலமை நலத்தால் அவர்கள் செய்து வந்தார்கள்.

- தவத்திரு அழகரடிகள்.

அடிகளார் திருச்சிக்கு ஒரு முறை பொழிவுக்கு வந்த போது அவரை அழைத்த அன்பர் “தங்களைக் கொண்டே தமிழையும் சைவத்தையும் வளர்க்கவேண்டியுள்ளது. தாங்களோ ஒரு வருகைக்குப் பெருந்தொகை கேட்கின்றீர்கள்.இவ்வாறு கேட்பின் எத்துணை பேர் அதற்கு ஈடு கொடுக்க முடியும். எனவே இனி இம் முறையைக் கைவிட வேண்டும் என்றார். அப்பொழுதில் அதனை மறுத்துரையாத அடிகள் அவர் தம்மைச் சென்னையில் மீண்டும் காண வந்தபோது, “அன்பரே அன்று திருச்சியில் சொன்னதை நினைவு கூர்கின்றேன். என் பேச்சக்குப் பெரும் பொருள் கேட்பதைக் குறையாகக் குறித்தீர்கள். அது குறையா? அதுபற்றிச் சிறிது இப்போது நினையுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/263&oldid=1580220" இலிருந்து மீள்விக்கப்பட்டது