உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் மலை

231

‘ஒரு பொது விழாவோ திருவிழாவோ நிகழின் அதற்கு ஒரு பாடகியை அழைக்கின்றீர்கள். அவளுக்கு இருநூறு முந்நூறு என்று வாங்குகின்றீர்கள். கூத்தாடும் கூத்திக்கு அதுபோல் பெருந்தொகை கொடுக்கின்றீர்கள் பெரு வங்கியக்காரனுக்குப் பெருந்தொகை வழங்கப்படுகின்றது. யான் அந்தக் கூத்தும் பாட்டும் குழலும் பயிலாமல் தமிழ் படித்த பாவம் குறையாகி விட்டது. அப்படித்தானே, என்றார். வினவிய அன்பர் கண்ணீர் வடித்தாராம்.

அடிகளார்க்கு இளமையில் தமிழ் கற்பித்த நாராயண சாமியார், அடிகளார் பழந்தமிழ்ப் புலமைக்கு வியந்தவராய்ச் சங்கப் புலவர் வருகிறார் சங்கப் புலவர் போகிறார் என்று கூறினார். அது பின்னர்ப் பிறர் கூறும் வழக்கும் ஆயிற்று.

தமிழ் இயற்கை மொழி. இந்தியா முழுதும் வழங்கிய மொழி என நெல்லையில் பேசினார் அடிகள். இந்தியாவின் ஒரு கோடியில் வழங்கும் தமிழை இயற்கைமொழி என்பதும் இந்தியா முழுதும் வழங்கிய மொழி என்பதும் பொருந்தாது என ஒருவர் மறுத்தார்.

அடிகள், இந்தியா மட்டுமன்று உலகமெங்கும் தமிழே முன்பு வழங்கியது எனச் சான்றுகளுடன் விளக்கினார்.

அடிகளார் சைவத்தின் மேல்நிலையைப் பெறவேண்டும் என்று சூரியனார் கோயில் மடத்தில் கூறினார்; மதுரைநாயகம், "தாயார்க்கு உதவியாய் இருப்பது முதன்மை” எனக் கூறித் தடுத்தார்.

அடிகளாரை அலுவலக எழுத்தராக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.மதுரை நாயகர்; அடிகள் ஆசிரியப் பணி செய்யவே ஆர்வம்” என்று மறுத்து விட்டார்.

ஆய்வுத்திறம்

'சிலப்பதிகாரத்தில் சித்திரப் சித்திரப் படத்துள் என்னும் கானல்வரியில் யாழ்கையில் தொழுது வாங்கி எனவரும் பகுதியைக் கேட்ட அடிகளார், 'யாழ்கையில் தொழுது வாங்கியவர் யார்? கொடுத்தவர் யார்?' என வினவினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/264&oldid=1580221" இலிருந்து மீள்விக்கப்பட்டது