உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் – 11 11

வாங்கியவர் மாதவி, கொடுத்தவள் வயந்த மாலை என்றேன். வயந்த மாலை ஏவற் பணிப்பெண்ணாகிய சேடியே அன்றோ! அவளை மாதவி எற்றுக்குத் தொழுதல் வேண்டும்? என வினவினார். வினாவை எதிர்பாராத யான் சிறிது தயங்கினேன். உடனே அடிகளார், மாதவி தொழுதது வயந்த மாலை அன்று; யாழ்க் கருவியையே மாதவி தொழுதாள். இசைத் தெய்வம் அதன்கண் தங்கி உயர்வதாகக் கலையுணர்வு மிக்க மாதவி கருதினாள்” என்றார் அடிகள்.

66

ஒரு சொல்லின் மூலம் அல்லது வேர் தமிழெனக் கொள்ள இயலுமாயின் அது பிறமொழிச் சொற்போல ஐயுறக் கிடப்பினும் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கொள்ளுதல் கூடும். ‘துரை’ என்னும் சொல் ‘துர’ என்னும் மூலம் அல்லது வேரினின்று செலுத்து - ஏவு என்னும் பொருள் உடையதால் ஏனையோரைச் சலுத்துபவன் ஏவுபவன் என்னும் குறிப்பில் ஒரு தலைவனைக் குறிப்பதாயிற்று. இவ்வாற்றால் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கோடல் பொருந்தும் என்றார் அடிகள்.

.

- ந. ரா. முருகவேள்.

அடிகளார் நூல்களைத் தாம் பயன்படுத்தியபின் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த முறை சுவை உடை ய கனி கிழங்குகளைத் திரட்டி வைத்த சபரியின் செயலையே நினை வூட்டுவதாகும். சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற்காகவே சபரி அவற்றைத் தொகுத்துவைத்தாள். மறைமலையடிகள் இத் தொகுப்பைத் திரட்டியதும் இதுபோலப் பொதுமக்கள் சேவையை உளத்தில் கொண்டே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமாலை :

-

முனைவர் எசு. ஆர். அரங்கநாதன் நூலகத்திறப்பு விழாப்பொழிவு 24-8-58.

வாழ்த்தாத நாளில்லை வையகம்

மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர் - வாழ்த்

ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார்போல்

அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/265&oldid=1580222" இலிருந்து மீள்விக்கப்பட்டது