உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

❖ - 11❖ மறைமலையம் – 11

செம்மொழி பேசி வந்த

திருமறை மலையார் பெற்ற

மும்மொழிப் புலமை யன்றோ

முற்றிய புலமை அன்னார்

தும்மலும் கல்வித் தும்மல்

தூக்கமும் கல்வித் தூக்கம்.

பாவலர் சுரதா.

நினைவு நிலையங்கள்

மறைமலையடிகள் நூல்நிலையம்

சென்னை இலிங்கிச் செட்டித் தெரு 261 ஆம் எண் இல்லம் வள்ளலார்தம் ஒன்பதாம் அகவையில் முதற்பொழிவு செய்த சோமு (செட்டியார்) இல்லமாகும். அவ்விடம் தென்னிந்திய தமிழ்ச் சங்கச் சார்பில் 1958 இல் மறைமலையடிகள் நூல் நிலையமாக உருவாகியது. அடிகளார் தம் ஆய்வுக்கெனத் தொகுத்து வைத்த மும்மொழி நாலாயிர நூல்களுடன் ஐம்பதாயிரம் நூல்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளூர்ப் பழுத்த பயன்மரமாய்’ இயங்கி வருகின்றது. ஆய்வுப் பகுதி, அரங்குப் பகுதி, வழங்கு பகுதி, செய்திப் பகுதி வ நாற்பகுதியினதாய் நூலகம் இயங்கி வருகின்றது. பல்வேறு பட்டங்கள் பெறுவாரும். நூல் எழுதுவாரும் பயன் கொள்ளும் வளநிலையம் இது. இதில் பழமையான இதழ்களும், புலவர்கள் படங்களும், கடிதங்களும் கையெழுத்துகளும் தொகுத்து வைக்கப்பட்டுள.

மறைமலையடிகள் கலைமன்றம்

-

என

சென்னை, பல்லவபுரத்தில் அடிகளார் வாழ்ந்த இல்லம், சைவசித்தாந்த சங்கத்தால் இந்திய தமிழக - அரசு பொருளு தவியுடன் வாங்கப் பெற்று மறைமலை அடிகள் கலைமன்றமாகத் திகழ்கிறது. அடிகளாரின் கையெழுத்துப் படிகள் நூலின் முதற்பதிப்புகள் இசைத் தட்டுகள் ஆகியவை கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள. தமிழ்ப் புலவர் பெருமக்களின் உருவப்படங்கள் காட்சியாக வைக்கப்பட்டுள. பயில்வார்க்கும் பயன்படும் வகையில்நூலகமும் உண்டு. இந்திய அரசுச் சுற்றுலாத் துறை சிறந்த சுற்றுலா இடமாகத் தெரிந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/269&oldid=1580226" இலிருந்து மீள்விக்கப்பட்டது