உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

மறைமலையடிகள் பாலம்

237

அடையாற்றுப் பாலம் தாண்டியே சைதையில் இருந்து பல்லவபுரத்திற்கோ, மறைமலைநகர்க்கோ செல்லுதல் வேண்டும். அப் பாலம் ‘மர்மலாங்' பாலம் எனப்பட்டது.அதற்கு மறைமலை யடி கள் பாலம் எனப்பெயர் சூட்டியவர் கலைஞர் மு. கருணாநிதி ஆவர். பல்லவபுரத்தில்

6

மேலும் அரசுப்பள்ளி, மறைமலையடிகளார் பள்ளி எனப்பெயர் வழங்குகின்றது! மதுரை மாநகராட்சிப் பள்ளியொன்றும் அடிகள் பெயர் விளக்குகின்றது.நாகையில் அடிகளார் சிலை உண்டு.மறைமலை பெயர்த்தெருக்கள், நகர்கள் ஆங்காங்கு உள. மன்றங்களும் அப்படியே.

மறைமலை நகர்

சென்னைக்குத் தெற்கே சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையே 40 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிராப்பள்ளி நோக்கிச் செல்லும் நாட்டுப் பெருஞ் சாலையருகில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நூறாயிரம் மக்கள் தொகை வாழ வாய்ப்புடைய தாய் அமைந்துள்ள நகர் மறைமலை நகர் ஆகும். தொழிற்சாலை, வணிக நிறுவனம், போக்குவரவு வாய்ப்பு, மருத்துவமனை, பள்ளிகள், பூங்கா, சிற்றுண்டிச்சாலை மனமகிழ்மன்றம், சிறிய பெரிய குடியிருப்பு ஆகியனவெல்லாம் கொண்டது. அடிகளார் பெயர் தாங்கும் நகரை அடுத்தொரு தொடர் வண்டி நிலையம். அதற்கு என்ன பெயர்? மறைமலைநகர்தொடர்வண்டி நிலையம்! புதிய நகருக்கு அடிகளார் பெயரிட்டதும் தொடர்வண்டி நிலையத்திற்கு அடிகளார் பெயரையே நிலைக்கச் செய்ததும் கலைஞர் மு. கருணாநிதி யவர்களின் கவின் தமிழ்ச் செயலாகும். அடிகளார் புகழ் வாழ்க! தமிழ்ச் சான்றோர் பெயர் வாழ்க! அடிகளின் கடிதம்

ஓம் சைவசித்தாந்த சபை,

மேலூர், தூத்துக்குடி, 31-12-1913

எனது அன்பிற்றிகழும் செல்வச் சிரஞ்சீவி திருவரங்கம் பிள்ளையவர்களுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/270&oldid=1580227" இலிருந்து மீள்விக்கப்பட்டது