உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் – 11

யான் முன் எழுதிய கடிதம் வந்திருக்குமென்று நம்புகின்றேன். அதன் பிறகு தாங்கள் 28-ஆந் தேதி எழுதிய அன்புள்ள கடிதம் வந்தது.

6

நம் அன்பினிற்கினிய செல்வச் சிரஞ்சீவி தியாகராசச் செட்டியாரவர்கள் நம் “சமரச சன்மார்க்க நிலையம்” நிலைப்படுதற் பொருட்டுத் தங்களோடு சேர்ந்து ஒத்துழைப்பது தெரிந்து, அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். இக்காலத்தில் அன்புமிக்க இளைஞர்களால் நடந்தேறும் அரும்பெருங் காரியங்கள், செல்லமும் அறிவும் முதுமையும் வாய்ந்த பெரியவர்களாலும் நடந்தேறுவதில்லை. இஃது என் அனுபவத்திற் கண்டது. பதினைந்து வருடங்களுக்கு முன் யான் மிகவும் இளைஞ யிருக்கும் போது நமது தமிழுக்குஞ் சைவசித்தாந்தத்திற்கும் உழைக்க முன் வந்தேன். அக் காலத்தில் செல்வமும் அறிவும் முதுமையும் வாய்ந்த முதியோர்கள் எனக்குச் சிறிதும் உதவிசெய்ய இசைந்திலர்; யான் செய்யத் தொடங்கின ஒவ்வொரு முயற்சி யினையும் வேண்டாவென்று சொல்லித் தடை செய்தவர்களும், அவற்றிற்கு இடையூறு செய்தவர்களுமே பலர். என்றாலும், அவர்கள் துணையை ஒரு பொருட்டாக எண்ணாது, எல்லாம் வல்ல இறைவனுதவியையே நம்பி, ஞானசாகரத்தைத் தொடங்கி நடத்தியும், “சைவ சித்தாந்த மகா சமாஜத்தை” ஸ்தாபித்து நடை பெறுவித்தும் ஆங்காங்கு இடையறாது சென்று உபந்நியாசங்கள் நிகழ்த்தியும் வந்தேன். அம் முயற்சிகளின் பயன் இப்போது தாங்கள் அறிந்ததே. தமிழ், சவ சித்தாந்தமென்னும் இரண்டன் பெருமை இவ்விந்தியாவிலே மாத்திரமன்றி அந்நிய நாடுகளிலும் பரவி வருகின்றது.

இச் சமயத்தில் நமது “சமரச சன்மார்க்க நிலைய”த்தை நிலைபெறச் செய்து நாம் குறித்த காரியங்களை ஒழுங்குடன் நடைபெறச் செய்வமாயின் உலகமெல்லாம் அரும்பெரும் பயன் எய்துமென்றற்கு ஐயமுளதாமோ? நம் நிலையக் காரியங்கள் தங்களையொத்த நல் இளைஞர் உதவியைக் கொண்டே நடைபெறுமாறு திருவருள் செய்யும் என்னும் நம்பிக்கையும் மிகவுடையேன். ஆகையால், முதியோர் உதவியையாவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/271&oldid=1580228" இலிருந்து மீள்விக்கப்பட்டது