உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

தமிழ்த் திருவாளர்

மறைமலை அடிகளாரின் வாழ்க்கை

அ. கனகராயர்

தமிழ்த்திருவும் மறைத்திருவும் ஒருங்கே அமையப்பெற்ற மாண்புமிக்க பேராசிரியர் மறைமலையடிகள் இன்றும் நம் மனக் கண்ணில் இருந்து ஆரா அமுதமாய், அருளுருவாய்க் காட்சியளித்து வருகின்றார்.

அவர்தம் உடலும் மறைந்தது.உண்மைத் தமிழ் உறவும் உயர் குறிக்கோள்களும் ஒப்புயர்வற்ற ஒழுக்க நிலையும் இங்கு மறைந்தில.

அடிகளாரை நான் பல்லாண்டுகளாக நன்கு அறிவேன். அவர்தம் திருவாயிலிருந்து தோன்றும் ஒவ்வொரு சொல்லும் தமிழ்ப் பண்பையும் தமிழ்க் கண்ணோட்டத்தையும் என்றும் குன்றா எழில்மிக்க தமிழின் சுவையையும் ஆடியின் நிழலில் அறியத் தோன்றுமாறு தெள்ளிதின் எடுத்துக் காட்டும்.

இளமை முதல் முதுமை வரையில் தமிழர் வாழ்விற்கு அடிகோலியவர் அடிகள். அடிகளின் உருவத்தோற்றம் யாவரையும் பிணிக்க வல்லது. பெருந் திருவாளராய் மறைமலை யாய்ப் பிறங்கி, மெல்லிய இனிய குரலில் சொற்பொழிவு செய்து தமிழ் உலகை உய்வித்தவர் அடிகளாவார் என்பதும் யான் சொல்லாமலே போதரும்.

தொன்னூற்கடலைக் கரைகண்டு,மற்றும்பன்னூற்டலையும் வாய்மடுத்து, செந்தமிழும் சைவத் திருநெறியும் ஓம்புவான் வேண்டித் தன்னலம் பாராத்தரா ஊக்கத்துடன் உழைத்தவர் நமது அடிகளாவர். அன்புக் கோயிலே அவர் உள்ளம்; அறிவுச் சுடரே அவர் உயிர்ப்பு; நண்புக்கோர் அணியாய்த் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/274&oldid=1580231" இலிருந்து மீள்விக்கப்பட்டது