உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

245

வாழ்க்கையை நடுநிலையில் நின்று கழித்தவர்; உடற்பயிற்சி முதலியவற்றை அதற்கு உறுதுணையாகக் கொண்டவர்.

மாதர் உலகமும் செம்மை நெறியுணர்ந்து வெம்மை

அகற்றித் தமிழர்க்கு ஆக்கம் தேட வழி காட்டியவர்.

இவரது தமிழ் நூல்களில் தலைசிறந்தனவாய் இலங்குவன. ‘அறிவுரைக் கொத்து’, ‘முல்லைப்பாட்டு ஆராய்ச்சி’, ‘பட்டினப் பாலை', 'கோகிலாம்பாள் கடிதங்கள்' முதலியனவாம்.

பொதுவாகக் கூறுங்கால் இவர் அளப்பரிய பெரும் புலவர். கலையின் உயிர்நாடியை உணர்ந்த ஒரு தமிழ் மருத்துவராகத் திகழ்நதார் நம் அடிகளார். கன்னெஞ்சும், வன்னெஞ்சும், இரும்பினால் ஏயந்த நெஞ்சும் படைத்த தமிழ்ப் பகைவராகிய கோளரவுகளுக்கு ஓர் இடியேறாக விளங்கியவர் நம் அடிகள்.

அடிகளார்

தம்மிடம் எவரேனும் வந்து சில ஐயுறவுகளை வினவினால் மனச் சோர்வின்றி அவர் கேட்ட வினாக்களுக்கெல்லாம் விடையளித்துக்கொண்டே தம் உணவு நேரத்தையும் பொருட்படுத்தாது சீரிய வீறிய திருத்தொண்டு புரிவார்.

இம்மட்டோ! இன்னும் எத்துணையோ ஆற்றல்களெல்லாம் வரிடம் குடிகொண்டிருந்தன. அவற்றை யெல்லாம் இங்கு விரித்துரைக்கில் இஃது ஒரு பெரிய நூலாக விரியும் என அஞ்சி இம்மட்டோடு இதனை யான் முடிட்துக்கொள்கின்றேன்.

அடிகள் முதலில் நாகையை விட்டுச் சென்னை வந்த பின் அடி கட்குத் திரு.வி.க அவர்களும், அவர்கள் குடும்பமும் மிகவும் உதவி செய்ததாக அடிகள் வாயிலாகவே கேட்டுள்ளேன். இறுதியில் உடனிருந்து உதவியோர், திரு.என். ஆடலரசு அவர்களும், சைதைத் திருவள்ளுவர் செந்தமிழ்ச் சிவநெறிக் கழகத்தாருமாவர்.

தமிழரிடம் வேண்டும் தலையாய பண்புகளில் ஒன்றாய நன்றி மறவாமை என்பது இவரது குருதியில் கலந்து நின்றது. ஓர் எடுத்துக்காட்டால் இதனை உலகோர்க்குக் காட்ட அடியேன் விழைகின்றேன்.

அடிகள் உயிர் துறக்கும் நேரத்தில் எழுதியுள்ள வாழ்க்கை உரிமைக் குறிப்பு ஏடு ஆகிய உயிலில் அடியேற்கு ஓர் ஆயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/278&oldid=1580237" இலிருந்து மீள்விக்கப்பட்டது