உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

11 ✰

  • மறைமலையம் – 11

திருக்கோயில் வழிபாடுகளைத் தொகுத்தும், வகுத்தும், வழிநிலை பிறழாது தெரியவைத்தும் இருக்கின்றார்.

அருளெனும் குழவிக்கு அன்பு தாயாக நிலவுகிறது என்கிற திருக்குறள் உண்மையைச் சிவநெறியில் காணலாம் என்பது அடிகள் கருத்து.முழு முதற் கடவுள் ஒன்று உண்டு. அதுவே சிவம் என்கிறார். அமைதியே குடிகொண்ட அருள்நெறி வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று இசைக்கின்றார். தமிழர்

காள்கைகளையும் பழந் தமிழரின் போக்குகளையும் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். இவைபோன்ற பல அரிய உண்மைகள் இவருடைய நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் அறிஞர் கண்டு தெளிக.

என்பும் உருகும் இசை பாடும் பண்புடையவர் இவர். இல்லறத் துறவியாகத் தம் இல்லின்கண் வீற்றிருந்து நல்லறம் புரிந்த நற்றமிழ் நாவலர் இவர். தமிழ்ப்பாலொடு எந்த நஞ்சையும் கலவாது தமிழ்க் குழவிகளுக்கு ஊட்டியவர்.

இவரது தூய செந்தமிழ் உரைநடையைக் கண்டு சீறுவார் ஒரு சாரார். மறுப்புக் கூறுவார் மற்றொரு சாரார். சுவையற்ற தென்று விளம்புவார் பிறிதொரு சாரார். இப்படிப்பட்ட காடுமையாளர்களை எல்லாம் அறக்களைந்து தமிழ் அறத்தை உணர்ந்து முயற்சியிலும் முன்னேற்றத்திலும் முனைந்துநின்று தொண்டாற்றியவர் இவர்.

வருந்தி வருவார்க்கு விருந்துவைத்துப் போற்றுவார் அடிகள். அவர்தம் குறையைத் தம்மாலியன்ற வரையும் போக்குவார். அன்பினால் அகங் குழைவார்.

தமிழுலகு தனி உலகாய்த் தமிழர்க்கும் பிறர்க்கும் வாழ்வு காட்டப் பாடுபட்டவர்.

மேல்நாட்டுப் பேரறிஞர்களும் கண்டு வியக்கும் முறையில் வியத்தகு நூல்களை எழுதி வெளியிட்டவர் அடிகள். ஆங்கில மொழியிலும் அறிவு நிரம்பப் பெற்றவர். அம்மொழியில் பல கட்டுரைகளும், வரலாறுகளும் எழுதியுள்ளார்கள்.

நம் அடிகளார் சிவனையே உன்னிக்கொண்டிருக்கும் உள்ளம் படைத்தவர்; மரபு நெறி தவறாது; மாசு படியாது சைவ உலகத்தைத் தளிர்ப்பித்தவர்; காய்தலும் உவத்தலுமின்றித் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/277&oldid=1580236" இலிருந்து மீள்விக்கப்பட்டது