உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

247

இஞ்சிச் சாற்றில், தேன் கலந்து உட்கொள்ளுதல்; அடிகளுக்கு அடிக்கடி நீர்க்கோவை உண்டாகும். சில வேளைகளில் பட்டினி கிடந்து நோயைத் தீர்த்துக் கொள்வதும் உண்டு.)

9.30 மணிமுதல் 10.30 மணிவரை

6. மணைமீதமர்ந்து மூச்சுப்பழக்கம் செய்தல், அனலில் நறுமணப் புகையூட்டி இறைவனை வழிபடுதல்.

10.30 மணிமுதல் 11.30 மணிவரை

7. காலை உணவு உண்ணுதல் (தட்ப வெப்ப நிலைக்குத் தக்கவாறு கோதுமைப் பாற்கஞ்சி, மோர் கலந்த கஞ்சி ஆகிய இவற்றுடன் உலர்ந்த பழங்கள், அத்திப் பழம், அங்கர் திராட்சை, வாதுமைப் பழம், அக்ரூட் கொட்டையிலுள்ள பருப்பு, பாதம் பருப்பு ஆகியவற்றையும் உண்ணுதல்.)

11.30 மணிமுதல் 12.30 மணிவரை

8. வீட்டுக் கணக்குப் பார்த்தல். அச்சுப் பிழை (புரூப்) திருத்துதல். அச்சகத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு வேலை கொடுத்தல். தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுபவரைக் கவனித்தல். தன் இல்லத்திற்கு வருபவருடன் உரையாடுதல்.

12.30 மணிமுதல் 2 மணிவரை

9. கால அட்டவணையிற் குறிப்பிட்டுள்ளபடி படித்தல்.

2 மணிமுதல் 2.30 மணிவரை

10. நண்பகல் உணவுண்ணுதல். அன்றாடம் அவர் குறிப்பிடும் முறையிலேயே உணவைச் சமைத்தல் வேண்டும். தேங்காய்ப் பாலில் கலந்த குழம்பு, மிளகுநீர் இலைக் கோசு, பூக்கோசு, நூல்கோல், சிவப்பு முள்ளங்கி, கீரை வகைகளில் ஒன்று. நல்லெண்ணெய்க்குப் பதிலாக நெய்; புளிக்கீடாக எலுமிச்சம் பழம்; உப்புக்கு இந்துப்பு,.

11. ஓய்வு

2.30 மணிமுதல் 4 மணிவரை

4 மணிமுதல் 5.30 மணிவரை

12. வருவாருடன் உரையாடல் மாணவர்க்குக் கற்பித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/280&oldid=1580239" இலிருந்து மீள்விக்கப்பட்டது