உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

  • மறைமலையம் – 11 11

பார்ப்பனராயும் அவர் சொல்வழி நடப்பவராயும் இருத்தலால், சைவ சமய வளர்ச்சிக்குந் தமிழ் வளர்ச்சிக்குந் தமிழ் உணர்ந்தார் செலவிற்கும் அரசினரிடமிருந்து உதவிபெறுதல் இயலாதா யிருக்கின்றது.

ம்

இதனை உணர்ந்தாவது தமிழ்நாட்டு மன்னர்களு சிற்றரசர்களும் சைவசித்தாந்த உணர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமது பொருளைச் செலவுசெய்தல் வேண்டும். ஆங்கில அரசினராற் போற்றி வளர்க்கப்பட்ட ஆங்கில மொழிப் பயிற்சிக்கே இவர்கள் தம்பொருளைச் செலவுசெய்தல் சிறிதும் பயன் தராததாகும்.

L

இனிச், சைவ அவைகளும் தமிழ்க்கழகங்களும் வைத்து நடத்துவோர், தம்முடைய கழகக்கொண்டாட்டங்களுக்குச் சைவமும் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களையே வருவித்து அவற்றை நடத்துதல்வேண்டும். வெறும்பட்டங்கள் வாங்கினவர் களையும் ஆங்கிலம் மட்டும் உணர்ந்தாரையும் வருவித்து ஆரவாரம் செய்தல் பயன்படாது. தமிழ் அறிஞர்களை வருவிப்போர் அவர்கட்குத் தக்கபடி பொருளுதவி செய்தல்வேண்டும்.

இனித் திங்கள் இதழ், கிழமை இதழ், நாள் இதழ் நடத்துவோர் தம்முடைய இதழ்கட்குக் கட்டுரைகள் எழுதுந் தமிழ் அறிஞர்க்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டுமே யல்லாமல்; அவர்களை வறிதே துன்புறுத்தி அவர்கள்பால் வேலைவாங்குவது நன்றாகாது.

செய்து அவர்களைச்

தமிழ்கற்றவர்கட்கு எல்லாவகையிலும் பொருளுதவி சிறக்கவைத்தால்தான் இந்நாடு முன்னேற்றம் அடையும். இவர்களைச் சிறக்க வையாமல், வேறு துறைகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இந்நாடு முன்னேற்றம் அடையாது. இதனை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும்.

மக்கட் கூட்டச் சீர்திருத்தம்

இப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்களிற் பெரும் பாலார் எல்லாம் வல்ல ஒருதெய்வத்தை வணங்காமல், இறந்து போன மக்களின் ஆவிகளையும், பலபேய்களையும் இவைபோன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/295&oldid=1580256" இலிருந்து மீள்விக்கப்பட்டது