உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

261

நிலையினையும் நுணுக்கமாக ஆராயும் 'சிவஞான போதம்' போன்ற உயர்ந்த அறிவு நூல்களையே உடையது. இத்துணைச் சிறந்ததாகிய இத்தமிழ் மொழி எத்தகைய நுண்ணிய உயர்ந்த ஆழ்ந்த கருத்துக்களையும் தெரிவித்தற்கு இயைந்த சொல்வள முடைய தாகலின், ஆரியம், ஆங்கலம் முதலான பிறமொழிச் சொற்களை இதன்கட் புகுத்தாமல் இதனையும் இதன் நூல்களையும் எல்லார்க்கும் தனிமையிற் கற்பித்தல் இன்றியமையாததாகும்.

தமிழ்நாட்டிற் செல்வர்களாயிருப்பவர்களும் பிறருந் தமிழ்மொழிப் பயிற்சிக்கும் தமிழ்க்கல்லூரிகள் அமைப்பதற்கும் பொருளுதவி செய்யவேண்டுமே யல்லாமல், இவற்றைவிடுத்து ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிப்பயிற்சிக்கும் அதற்குரிய கல்லூரிகட்குமே பொருளுதவிசெய்தல் நன்றாகாது. இத்தமிழ் நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழி யிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப் படல் வேண்டும்.

ஆங்கிலம் முதலிய அயல்மொழிகளிலுள்ள இயற்கைப் பொருள் நூல்களையும் உயிர்நூல்களையும் கடவுள் நூல்களையும் தமிழில் மிகுதியாக மொழி பெயர்த்து அவற்றைப் பயிலும்படி செய்தல் வேண்டும்.

சைவ

மடத்தின் தலைவர்கள், அரசர்களுக்குள்ள பொருள்களிலும் மிகுதியான பொருள்களை வைத்துக்கொண்டு பாவமான பல துறைகளிலும் அவற்றைப் பாழ்படுத்தி வருகின்றார்கள்.

சைவசித்தாந்தமுந் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களோ தமது வாழ்க்கைக்கு வேண்டும் செலவுக்குத் தக்கவருவாய் இன்றிப் பெரிதுந் துன்புறுகின்றார்கள். இவ் அறிஞர்கள் மிக இடர்ப்பட்டு எழுதி வெளியிடும் நூல்களின் செலவுக்குக் கூடப் பொருளுதவி செய்வார் எவரும் இல்லாமையின் அவர்கள் படுந்துன்பங்களுக்கு ஓர் அளவேஇல்லை. ஆதலாற், சைவ மடங்களின் பொருள்களை இத்தகைய அறிஞர்க்கும், சைவ சித்தாந்தக் கல்லூரிகட்கும், தமிழ்க் கல்லூரிகட்கும் மிகுதியாய்க்கொடுத்துப் பயன்படுத்தல் வேண்டும்.

இவ் இந்தியநாட்டின் அரசினை நடத்துதற்கு உதவியாய் பெரும்பாலார் ஆரியமுறையைத் தழுவிய

நிற்பாரிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/294&oldid=1580255" இலிருந்து மீள்விக்கப்பட்டது