உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் – 11 11✰

யன்று.ஏனென்றால், வணங்கச் செல்பவர்களுக்குக் கடவுள்பால் உள்ள அன்பும் அச்சமும் குறைந்துவிடும்; அவ்விடமுந் தூய்மைகெடும்; மக்களின் நெருக்கடியும் இடைஞ்சலைத் தரும். வணங்கச் செல்வோர்களில் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடுகள் அடியோடு நீக்கப்படல் வேண்டும். சில கோயில்களில் வரும் ஏராளமான வரும்படியிற் கோயிலின் இன்றியமையாச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் பட்டனபோக, மிச்சத்தைத் தேவாரபாடசாலைக்கும், தனித்தமிழ்ப் பாடசாலைக்கும், சைவசித்தாந்த சபைகட்கும், தமிழ் சித்தாந்த முணர்ந்த ஆசிரியர்க்கும், தமிழ் நூல் எழுதுவார்க்கும், சைவசித்தாந்த விரிவுரை யாளர்க்கும், கோயிலைச்சார்ந்த சத்திரஞ் சாவடிகட்கும் பயன்படுத்தல்

சவ

வேண்டும்.

கோயிலின் வரும்படியைக்கொண்டு பார்ப்பனர்களுக்கு

மட்டும் உணவு கொடுத்தலும், ஆரியவேதபாடசலை அமைத்தலும், ஆங்கிலப்பள்ளிக்கூடங்கட்குப் பொருளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் மொழிச் சீர்திருத்தம்

இத் தென்றமிழ்நாட்டிலுள்ள நம்மனோர்க்கு உயிர்போற் சிறந்ததாகிய தமிழ்மொழியானது பல்லாயிர ஆண்டுகளாக உயிரோடு உலவி வரும் சிறப்புடையது. ஆரியம் முதலான பிற மொழிகளைப்போல் இறவாதது. ஆரியத்திலுள்ள கட்டுக் கதைகளைப்போல்வன சிறிதும் இல்லாதது. இயற்கைப் பொருள்களையும் மக்களின் அன்பு அருள் ஒழுக்கங்களையும் கடவுளையும் அடியார் வரலாறுகளையும் பாடின உண்மை நூல்களே நிரம்பி உள்ளது. சாதி வேற்றுமையினையும், ஒரு சாதியை உயர்த்தி ஏனைப் பலசாதிகளைத் தாழ்த்தி முறை யில்லாத விதிகளை வகுத்த ஆரிய நூல்களைப் போன்ற முறையற்ற நூல்கள் சிறிதும் இல்லாதது. கடவுளின் அருளைப் பெறுதற்கும், வாழ்க்கையின் நலங்களை அடைதற்கும், எல்லா மக்களும் ஒத்த உரிமை உடையரென வற்புறுத்தும் ‘திருக்குறள்’, 'பெரியபுராணம்' போன்ற உயர்ந்த ஒழுக்கநூல்களையே உடையது. ஆரியத்திலுள்ள கட்டு கதைகள் மலிந்த புராண நூல்கள் சிறிதும் இல்லாமற் கடவுள் நிலையினையும் உயிர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/293&oldid=1580254" இலிருந்து மீள்விக்கப்பட்டது