உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

இது, அடிகளாரின் பாநலன் - திறன் காட்டும் நூலாகும். அடிகளாரின் பல்துறைப் பாடல்களையும் தொகுத்துக் கழகப்புலவர் குழுவினர் இந்நூலை வெளியிட்டுள்ளனர். சங்கப் பாக்களைப் போல விளங்கும் அடிகளார் பாநலமும், ஆங்கிலப் பாடல்களையும் வடமொழிப் பாடல்களையும் தமிழ்நாட்டியல்புக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்துள்ள அடிகளார் திறமும் அனைவரும் அறிந்து அ வியந்து மகிழும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

“செழும் புனலும் கொழும் பழமும்

எழும் பொதியக் குளிர் வளியும் தழும் பசியப் பயிர் வளமும்

செழும் பொழிலே வாழி அன்னாய்

என அமையும் அடிகளாரின் நிலமகள் வணக்கப் பாடலும் இது போல் புதுமையும் சுவையும் மிக்கு விளங்கும் அடிகளாரின் பிற பாடல்களும் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன.

அடிகளாரின் ஆங்கில நூல்களாக விளங்குவன மூன்று. அவை பற்றிய செய்திகள் இவ் ஆய்வேட்டின் 'பன்மொழிப் புலமையும் திறமையும்' என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

அடிகளார் நூல்களின் அடிப்படைகளாகத் தமிழ் நலமும், தமிழர் நலமும், தமிழ்ச் சமுதாய நலமும் விளங்குதல் வெளிப்படை யாகும். அடிகளாரின் வரலாற்றறிவு, ஆராய்ச்சித்திறன், இலக்கிய ஈடுபாட்டுணர்வு ஆகிய பல்துறை அறிவு நலங்கள் அவர்தம் நூல்களுக்கு அழகும் ஆற்றலும் சேர்க்கின்றன அடிகளார்தம் நூல்களில் பழந்தமிழ்த் திறன் பாராட்டப்படுகிறது. தம்காலத் தமிழ்நிலை காட்டப்பெற்றுள்ளது; வருங்காலப் பைந்தமிழின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/36&oldid=1579993" இலிருந்து மீள்விக்கப்பட்டது