உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

வன்னமயில் நறுஞ்சாந்தும் மணியானை அணிமருப்பும் இன்னபல அருஞ்சரக்கும் ஏத்துகவென் றீந்தனையே

43

(4)

தொழில்நுட்பம் மிகச்சிறந்த துகளறுபட் டாடைகளும் கொழும்பருத்தி இலவம்பஞ் செலிமயிரிற் கோவைசெய்து செழும்பாலின் நிரையெனவும் திகழ்பாம்பின் உரியெனவும் ஒழுங்காகச் சமைத்தஉடை உலகமெலாம் நிலவியதே.

(5)

உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்க்கோர் உயிரனையாய் பலவாறு நின்புகழ்மை பாரித்தென் சிற்றறிவாற்

சொலவருமோ தொலையாத வளமுடையாய் தொன்றுதொட்ட நலமெல்லாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே.

(6)

அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து

1.

2.

3.

4.

5.

முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலும் முதிர்ச்சியுற மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றேம். இன்னும்இவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்த்துதுமே.

அடிக்குறிப்புகள்

(7)

குளம் குளம்போலும் நீர் நிலைகளை; உளம் - உள்ளத்தின் ஆற்றல்கள்; எங்குமாய் விளங்கும் உனக்கு மூதறிஞர் உயிர்போல்வர் அன்னாய் – உலகன்னையே

உலகத்தில் பல நாடுகளில் மக்களெலாம் பேதையராய் இருந்த அந்நாள் என்க. வரிந்தனர் – நாகரிக வாழ்க்கை எழுப்பி முன்வந்தனர்; நின் மகார் - நின் தமிழ் மக்களாகிய இந்திய மக்கள்!

பிறநாட்டார் – பிறநாட்டார்க்கு. இந்திய மாதே - தமிழிந்திய மாதே!

உவரி - ஒரு துறைமுக நகர்.

கோவை செய்து - கோத்து; நெய்து. உடை – உடைகளும்; நிலவியது - நிலவின; ஒருமை பன்மை மயக்கம்.

6.

பாரித்து பெருக்கி; நாணினையே - நிலைகுறைந்தனையே.

7.

மக்கள் நிலையுயர்தலால் நாடும் உயர்கின்ற தென்றபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/76&oldid=1580033" இலிருந்து மீள்விக்கப்பட்டது