உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

❖ 11❖ மறைமலையம் – 11

12

செவ்வந்திமாநகரக் கல்லூரிப் பாட்டு

Introductory Note - முகவுரை

ஆங்கில மொழியில் வல்ல கிரே என்னும் நல்லிசைப் புலவர், ஒரேஸ் உவால்போல் என்னும் முதன்மந்திரி புதல்வரொடு கேண்மை கொண்டு மற்றவரோடு ஐரோப்பாக் கண்டத்தின் தென்பகுதியில் யாத்திரை போனபோது இடையில் அவர்க்குந் தமக்கும் மனவேறுபாடு நிகழ, அவரைப் பிரிந்து போந்து இங்கிலாந்து தேசத்திலுள்ள தமது நாட்டிற் சென்றிருத்தலும், யாத்திரை முடித்துத் திரும்பத் தந்நாடடைந்த ஓரேஸ் உவால்போல் என்பவர் கிரே என்னும் புலவரொடு தம் மிடை நிகழ்ந்த அவ்வேறுபாடு தமது தகுதியிலொழுக்கத்தான் உண்ட ாயினதென்றும் இனி அதனை மறந்து தம்மொடு பெயர்த்துங் கேண்மை கொண்டொழுகல் வேண்டுமென்றும் கிரே என்னும் புலவரை இரந்து கொண்டு ஒருகடிதம் விடுப்ப, அதற்கு இசைந்து அவர் உவின்ஸர் என்னும் மலைக் கோட்டையிலிருந்த தந் நண்பரைக் காண்டற்பொருட்டுச் சென்றபோது தம்மெதிரே விளங்கித் தோன்றிய ஈட்டன் என்னுந் தாங் கல்வி பயின்ற கல்விக் கழகத்தையும் அதனை யடுத்துயர்ந்த உவின்சர் மலையையும் அதனடிவாரத்தோடும் தெம்ஸ் நதியையுங் கண்டு புனைந்து பாடியது இப்பாட்டென்ப.

கிரே என்னும் புலவர் தந்நண்பர் உவால்போல் என்பவரோடு ஒருங்கு கல்வி பயின்ற கழகம் ஈட்டன் கலாசாலையாம். இக்கலாசாலை இங்கிலாந்து தேசத்திற் செங்கோலோச்சிய என்றி என்னும் புகழ்மன்னராற் கி.பி 1440 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உவின்சர் என்பது ஒரு சிறு குன்று; அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/77&oldid=1580034" இலிருந்து மீள்விக்கப்பட்டது