உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

45

குவட்டிலியற்றப்பட்டுள்ள கோட்டையானது இங்கிலாந்து தேசத்து அரசர் இனிது வாசஞ் செய்வதற்கு ஏற்ற உறையுளாகப் பயன்படுவது.

இனி, இவ்வரிய பாட்டைக் கிடந்தவாறே யெடுத்துக் கொண்டு மொழிபெயர்ப்பின் நிலநூல் பயிற்சி தேறாத செந்தமிழ் மொழியில் வல்ல எம் பெருமுதுமக்கள் இப்பாட்டின்கட் காணப்படும் ஊர்ப்பெயர் இடப்பெயர் யாற்றின் பெயர் மலைப் பெயர் முதலாயினவற்றுள் ஒன்றுதானும் அறிய மாட்டாமையின் மனவெழுச்சி குன்றி அதனைப் பயிலாது போகடுவாராதலானும், பிறமொழிச் சொற்கள் தன்னகத்து விரவிவருதலால் தன்னழகிழந்து சுவை வேறுபட்டுக் காட்டுஞ் செந்தமிழ் மொழியில் அச்சொற்களை மாட்டிவிட்டு வழங்கல் வடுச்சொற்கேதுவா மாகலானும், சிங்கள முதலிய பிறமொழிச் சொற்களெல்லாங் கலந்து வழங்குந் தமிழ் மொழியை அவற்றொடுபடாது வழங்குந் தூய்மை யுடைத்தென்றல் ஏலாதாமென்பார்க்குச் சிங்கள முதலிய பிறமொழி மாக்கள் தம்மொடு கலந்து பழகுங்கால் அவர் சொற்களை எடுத்துக் கொண்டு தமது தமிழ் வழக்குக் கேற்குமா றெல்லாந் திரித்து உரைநிகழ்த்துந் தமிழ் முதுமக்கள் செந்தமிழியல் வழக்குப்பற்றி வரும் அத்திறம் போலாது எமக்கு வேண்டியவாறெல்லாம் பிறமொழிச் சொற்களைத் தமிழ் மொழியிற் புகுத்தி வழக்கியல் வேறுபடுத்தல் உலக நெறியொடு மாறுபடுமாதலானும் இப்பாட்டின் ஒழுகலாற்றிற் கியையத் திரிசிரபுரம் என்று வழங்குஞ் செவ்வந்திமாநகர்க் கலாசாலையைப் புனைந்து பாடியதாக இதனைத் தமிழில் மொழிபெயர்த் திட்டாம்.

என்னை? முதனூலிலுள்ள ஈட்டன் கலாசாலைக் கேற்ப புனித யோசேப் கலாசாலையும் எஸ். பி.ஜி கலாசாலையும், உவின்சர் என்னுங் குன்றிற்கு ஏற்பத் தாயுமானவர் மலையும், உவின்சர் அடிவாரத்தோடும் தெம்ஸ் யாற்றிற்கேற்பத் தாயு மானவர் மலையடிவாரத்திலோடுங் காவிரியாறும் இந்நகரிடைக் காணப்படுதலான் என்பது.

அற்றேல்,ஈட்டன் கலாசாலையைப்போலவே இந்நகரிடைக் கல்விக் கழகங்களும் ஆங்கிலமொழிப் பெயர்பெற்று நிலாவுதலின் அப்பெயர்களை இப்பாட்டின்கட் புகுத்தி நடவல் வழுவாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/78&oldid=1580035" இலிருந்து மீள்விக்கப்பட்டது