உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

11 ✰

மறைமலையம் – 11

பிறவெனின் நன்று சொன்னாய்! அங்ஙன மாட்டிவிடினன்றே வழுவாம், முதனூலில் ஈட்டன் கலாசாலைப் பாட்டென்று தலைக்குறியீடு தந்ததன்றி அப்பெயர் பாட்டின்கண் தந்து கல்விக் கழக க

வழங்கப்படாதவாறுபோலக்

மன்றன்

மாத்திரைக்கன்றி அப்பெயர்கள் அதனுள் தந்து வழங்கப்படா வென்பது காண்க.

இனிக் கிரே என்னும் புலவர் முதிர்ந்த செய்யுட் புலமை மாட்சி கை வரப்பெற்று உலகியற் பொருணெறி முழுதுணர்ந்து பெருநலஞ் சுவைப்பச் செய்யுளிடைக் கொளுவி இனிது மிழற்று மாறும், கழகத்திடைக் கல்விபயிலுஞ் சிறுகுறுமாக்களியல் புணர்ந்து கூறுமாறும், பின் அச்சிறார் தமக்கு வருந் துன்பங்களை யெல்லாந் தொகுத்து இரக்கந் தோன்றக் கிளக்குமாறும் பிறவும் பெரிதும் நன்கு மதிக்கப்படுவனவாம்.

அவற்றுள், முதல் ஐந்து செய்யுட்களில், தம்மெதிரே அழகொளிர நிவந்து சேணோக்கும் கல்லூரியின் கொடு முடியினையுங் கோபுரத்தினையும் விளித்து நீவிர் இளமரக்காவின் வளமுறு நிழலையும் குறுமரக்காட்டின் நறுமலர்ப் பரப்பையும் சழும்புன்னிலத்தின் கொழும்பொழிதமையும் ஊடுருவிச் செல்லுங் காவிரியாற்றினையும் அதனையடுத்துயர்ந்த நிலப் பரப்பையுங் காண்பீரென்றும், தமது பிள்ளைமைப்பருவத்தே திரிந்தாடுவதற் கிடமாயிருந்த குன்றுகள் மரநிழல்கள் வயல் களாகிய இவற்றை விளித்து நும்மிடத்தினின்று மெல்லிதின் வீசுந் தென்றற் காற்று எமதிளைப்பை நீக்கி எம்முயிருறு துயர் நீங்க ஆறுதல் சொல்வது போலவும் கழிந்த எமது இளமைப் பருவத்தையும் மகிழ்ச்சியையுந் தருவதாகிய ஓரிளவேனிற் பருவத்தைப் பெயர்த்தும் வருவிப்பது போலவும் உலாவு மென்றுங் கூறுமாறு காண்க; பின் இரண்டு செய்யுட்களிற், காவிரியாற்றை விளித்து! ‘அன்னாய், புல்வளர்ந்த நின் பசிய கரையிடத்தின் முன்விளையாட்டயர்ந்த சிறுவர்களுள் நின் திரையைத் தமது திண்டோளாற் கிழித்து நீந்தினாரெவர்?’ என்றும், 'நாகணவாய்ப் புட்களைக் கண்ணியாற்பிடித்துக் கூட்டிற் சிறைப்படுத்தி மகிழ்ந்தாரெவர்?' என்றும், 'இருப்பு வளையங்களைக் கோலாற் புடைத்து ஓட்டிப் பின் ஓடினாரெவர்?' என்றும், 'பந்து ஆடினாரெவர்?' என்றும் வினாவுதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/79&oldid=1580036" இலிருந்து மீள்விக்கப்பட்டது