உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

47

பின்னிரண்டு செய்யுட்களிற் கல்விக் கழகத்திற் பயிலுஞ் சிறாரிற் சிலர் தாம் புறம்போய் விளையாடுங் காலத்தை நினைந்து கொண்டு முறுமுறுவென்று பாடஞ் சொல்லுதலும், அங்ஙனங் கழகத்தினுள்ளிருந்து பயிலுதற்கு அமையாது துணிந்த வேறு சிலர் திரும்பித் திரும்பித் பார்த்துக் கொண்டே ஓடுதலுங் கூறப்பட்டது காண்க.

பின் மூன்று செய்யுட்களில், அச்சிறார் பலவற்றை யடைதற்கு விரும்புதலும், விரும்பிய பொருளெய்தியதும் அதன்கண் அத்துணை விருப்பஞ்செய்யாமையும், ஒரு கணத்திற் றோன்றிய இடரை அவர் மறு கணத்தின் மறத்தலும், அவரது கட்டிளமை யெழிலும், செய்தொழின் முயற்சியும், நுண்ணிய அறிவும், களிப்பும், கவலையின்மையும், நாளை வரு துன்பங்களை நினையாமையும் பிறவுங் கூறப்படுதல் காண்க.

பின் இரண்டு செய்யுட்களில், அச்சிறார் தம் விதி நினையாமல் இங்ஙனம் மகிழ்ந்து விளையாட இடர்களெல்லாம் அவரை உணவு கொள்ளுதற்குப் படை குழுமி நிற்குமாறும், அந்நிலையை யறிந்து 'காவிரி யென்னும் நங்காய்!' நீயேனும் அச்சிறார் தமக்குச் சொல்லாயோ?' என்றுரைக்குமாறுங் காண்க; பின் ஏழு செய்யுட்களில், அவரை வருத்துந் துன்பங்களின் தொழிற் கூறுபாட்டை விரித்துக் கூறுதல் காண்க;

பின் இறுதியிற் கிடந்த செய்யுளில், ‘அச்சிறார் தமக்கு போது நுகரும் இன்பங்களெல்லாம் விரைந்து கழியத் துன்பங்கள் கடுகிவருதல் ஒருதலையாகலான் அவர் நாளைவரும் இடரை நினைந்து இன்று துய்க்கும் இன்பத்தினையும் இழத்தல் வேண்டா' என்றும், ‘அறியாமையே இன்பம் பயக்குமெனின் அறிவு கொண்டு பிதற்றுதல் மடமையாம்' என்னும் உறுதி மொழிந்து முடித்தவாறு காண்க.

இங்ஙனம் இப்புலவர் அமைத்தியற்றிய சொற்பொருள் நயங்களும் நுட்பங்களும் கற்றார்க்கெல்லாங் கழிபேரின் பம்பயக்கு நீரவாகலின், அவைதம்மைத் தமிழ்ச் செய்யுளால் மொழி பெயர்த்துத் தமிழ் வழக்குக் கேற்பச் சில பொருள் கூட்டியும் வேறு சில கழித்தும் மற்றுஞ் சில திரித்தும் முதனூற் பொருளொருமை கெடாது இயன்ற அளவு தமிழ்ச் செய்யுட் களைச் சுவைப்படுத்தியும் எழுதினாம். இன்னும் இவற்றின்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/80&oldid=1580037" இலிருந்து மீள்விக்கப்பட்டது