உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் – 11 11 ✰

சொற்பொருணயங்களைத் திருத்திப் பொலிவு செய்யவல்ல அருமைகள் இதனை நோக்கும் அறிவுடையோர் அறிவாராயின் அவற்றை எமக்கு அன்பு கூர்ந்து தெரிவித்துக் கடமைப் படுத்துவாராக.

"மக்களாதலே துக்க வேதுவாம்" - உறுதி மொழி

மாண்கலைதந் தலைவர்செயு நன்றிதனை மதித்தவர்தங் காண்பினிய தூநிழல்சேர்ந் தினிதிருப்பக் கரும்புறழ ஊண்சுவைக்குங் காவிரிபாய் சூழலெலா மொளியுறுத்திச் சேண்பொலியுங் கொடுமுடிகாள், பண்டுபொலி சிகரிகாள்?

(1)

இளங்காவின் கொழுநிழலு மிறும்புதரு நறுமலரும்

வளங்கெழுபுன் னிவப்பொழியும் வடிந்தோடும் வெள்ளியெனத் துளும்புபுனற் காவிரிதான் சுழன்றுசெலத் திகழ்மலையின் விளம்புநுதற் கீழ்விளங்கு வெளியெலாங் காண்பீரால்.

(2)

இலங்கவலை யாமாகி யினைதலறி யேமாகிப்

புலம்பெருகாப் பிள்ளைமையிற் புகுத்துதிரிந் தியாமாடு நலம்பெருகு குன்றுகாள் விழைவுதரு நன்னிழல்காள்

பலன்றிரியப் பெருங்காதல் கொளுவியநற் பழனங்காள்.

(3)

மெல்லிதினும் மிடனின்று வீசுகா லெமக்குநிலை இல்லின்பந் தந்துதம திருஞ்சிறையை மகிழ்சிறப்ப

வொல்லெனநன் கெழுப்புதொறு முயங்குமுயிர்க் குறுதிமொழி அல்லலறப் புகன்றெம்மை யாற்றுவிப்ப தெனத்தோன்ற. ஒருங்குபொதுண் மலரவிழ வுயர்மணமுஞ் செழுந்தாது நெருங்கியளைந் தெழுந்தினிது நெடுவிசும்பிற் சிதர்தோறும் பெருங்களியு மிளம்போதும் பெருக்குமோ ரிளவேனில் தருங்குறிய தெனத்தயங்குந் தன்மையெலாங் காண்டுமால்,

(4)

(5)

காவிரியென் றுரையன்னாய் களியயருஞ் சிறுவர்குழாம் பூவிரிபைங் கரைமருங்கு பொருந்திவிளை யாடியவா றோவிலரா யின்பநெறி யுறுதலெலாங் காண்கையினாற் றாவுகொழுந் தோளினெவர் தயங்குதிரை யிடைபோழ்வார்.

(6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/81&oldid=1580038" இலிருந்து மீள்விக்கப்பட்டது