உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

இசைமிழற்றும் பூவைதமை யிரும்பொறியிற் சிறைப்படுத்து நசையுடைய ரெவரிருப்பு நவில்வளையத் துரந்துசெலும் வசையுடைய சோம்பலுள முடையரெவர் வரிப்பந்து விசையுடனன் கெழுந்தோட விடுகுநர்மற் றெவருரையாய்.

அருந்தொழிலிற் புகுந்தனரா யவர்சிலவர் புறந்திரியத் திருந்துபொழு தினிதாக்குஞ் சிந்தனைசால் காலைகளில் இருந்துதம முறுமுறுக்கு மிரும்பணியிலீடுபடப் பொருந்துமுள மிலர்வேறு துணிவுடைய புன்சிறார்.

வரம்புடைய தமதுகுறு நிலவாட்சி மனவெறுப்பப் பரம்புபுற நிலமுழுதும் பார்த்துமென வோடுதொறுஞ் சிரந்திரும்பிப் புறநோக்கிச் சிவணுவளி யுளர்தோறும் புரம்பரவு குரல்கேட்பப் பொருந்துவெருக் களிகொள்வார். களியளைந்த நம்புநசை கருதுமா றுரங்கொளினும் எளிதடைந்த பொழுதவர்தாம் விரும்பலிலா வியம்பினார் துளிவிழியிலுகுதலுமே தோன்றாம லதுமறப்பார் தெளியிளமை யொளிவிளங்குந் திறமுடைய தின்மையார். செழுமுளரி யிதழ்வண்ண வெழில்வயங்கு திணிநலமும் எழுநாள்க டொறும்பெருகு செய்திறமும் இன்னாத

49

(7)

(8)

(9)

(10)

கொழுமதியு மதுகைதரு கொழுங்களியுங் கவல்வதிலாப் பழுதுகெடு பகற்பொழுதும் பரிவில்லாக் கங்குலும்

(11)

தாளாண்மை தூயனவுந் தயங்குகதிர் நாள்விடியல் வாளாது கழிந்துவிடு மின்றுயிலு மற்றுமெலாம் நாளாலு முடையசிறார் நாளைவரு தீதுள்ளார் நீளாத கவலையெலா நிகழ்நாண்மேற் பிறிதில்லார். அழிவுதரும் விதிநினையா ரதற்கிரையாய் விளையாடப் பழிவிதியினுழையோரும் பாழ்வினையின் கொல்படையும் மொழிசிறுவர் தமைச்சூழ முதிர்ந்துகடி கொளுமாறு விழிகொடுகா ணுதிநங்காய் விளங்குபெரு வளமுடையாய். சிறுதூற்றி னிடைமறந்து சிறுவர்தமை யுணவுகொளக் கறுவுடனக் கொல்படைதான் காவலொடு முறுநிலையை

(12)

(13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/82&oldid=1580039" இலிருந்து மீள்விக்கப்பட்டது