உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் – 11 11 ✰

(14)

(15)

(16)

(17)

மறுவின்றி வயங்குபுகழ் மருவுடையாய் மற்றவருக் குறுதியுறக் காட்டியவர் மக்களென வுரையாயோ. மாந்தருளங் கொழுதியுணும் வல்லெருவை தமைப்போல ஈர்ந்தவரைப் படுவிக்கும் இன்னாத கொடுங்காதல் காந்துசினம் விளர்வெருவு கரந்தியங்கு கழிநாண ஏந்துமெழின் மெலிவிரகம் இளமையெலாங் கழிக்குமால். அவ்வியந்த னெயிறதுக்கி யாழ்நெஞ்சி னகங்கறிப்பச் செவ்விதலா அழுக்காறுந் திறங்குழைக்கும் பெருங்கவலும் ஒவ்வலிலா வலிக்குமுகந் தெளியாத வுள்ளுடைவும் எவ்வமதின் கூர்ங்கணையு மிடையுருவி யடையுமால். பேராசை யொருசிலரைப் பிறங்கியெழ நனிகடவி ஓராவவ் வேழையரை யுடன்சுழற்சி யிளிவினிலுஞ் சீராத விகழ்வினிலுஞ் செலப்படுத்துத் திரிதரவுந் தீராத பொய்ம்மையெனுந் தெறுக்காலிற் கோட்பட்டார். இளகலிலா வன்கண்மை யினைதலிலா விருவிழியும் பளகுமிக வவர்விழிநுண் டுளியரும்பப் பணித்துநக வுளகுருதி வறந்துகெட நினைந்திரங்கு முயர்தகவுந் தளவவிழ்த லெனத்துயரி னிடைநகூஉத் தனிவெறியும். ஆண்டுகளென் றுரைபடுக ராழ்நிலத்திற் கோளிழைப்ப வீண்டிநிற்குங் கொடும்படைதா மிறவியெனு மறையனுக்கு நீண்டபெருங் கிளையெனினும் நீடியதம் மிறைவனிலும் மூண்டபெருங் கொடுமையினார் முறைமைசொலற் பாலதோ. ஒன்றுமுளி யிடைமுறிப்ப வொன்றுநரம் பினையெரிப்பத் துன்றுகொழுந் தசையிசிப்ப மற்றொன்று தோன்றுமுவை நின்றவுயிருறுப்பிடங்க ணிலையுருவி வெகுண்டலைப்பப் பொன்றுமிடி யுயிர்விறைப்பப் பனிக்கைதனைப் பொருத்துமால். (20) பிறிதுசிறி துடலையுணுந் தெரியகவை யினநிறைப்பப் சிறிதுவர வவரவரும் பேதுறுவ ரவர்வினையால் வறிதுபிறர் வருந்துதல்கண் டினைவோரும் வருந்தாத குறியவரு மெல்லாருங் கலுழ்ந்திரங்கக் குறிப்பட்டார்,

6

(18)

(19)

(21)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/83&oldid=1580040" இலிருந்து மீள்விக்கப்பட்டது