உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

பாமணிக் கோவை

இன்பமெலாம் விரைந்தோடு மிடர்தாழ்த்து வருதலிலை பின்புவரும் விதிநினைதல் பிழைதரு மாதலினான் முன்புசிறா ரவையறிதல் வேண்டாயா மொழியமைந்தாம் இன்பமறி யாமையெனி னறிவுகொள லெளிமையே.

+

அடிக்குறிப்புகள்

51

(22)

இது 'ஞான போதினி' (1901) 5 ஆவது தொகுதி முதற் பகுதியில் வெளியிடப் பெற்றது.

என்றி என்னு மன்னர் ஈட்டன் கல்லூரியமைத்துக் கல்வி வளம் படுத்து நிறுத்தலின் அந் நன்றியறிந்து அவர்தந்த அந் நீழலிலிருந்து கொண்டு கலைகளெல்லாம் அவரை வழுத்தும் என்று முதனூலிற் கூறப்பட்டதற் கிணங்கச் செவ்வந்திக் கல்லூரிகளிலும் அவ்வாறு கலைகள் தந்தலைவர் செய்ந்நன்றியை மதித்து இனிதிருக்கும் எனப்பட்டது. சூழல் - இடைவெளி கொண்டு சுற்றிலும் மரமடர்ந்த சோலை Glade கொடு முடி - Spire. சிகரி - Tower

-

அம்

இறும்பு - குறுமரக்காடு - பொழி புற்பற்றை, Tuff. உலையில் உருக்கி வடித்த - வெள்ளிபோல நீர்துளும்பியோடுங் காவிரி யென்க. கொடுமுடிகளுஞ் சிகரிகளும் மலையினுந் தாழ்ந்த உயரமுடையனவாதலால் மலைக்குவட்டின்கீழ் விளங்கு நிலப்பரப்பெல்லாங் காண்பவெனப்பட்டது. 'கவலையிலமாகி' என்க. இனைதல் - வருந்தல். புலம் பெருகாப்பிள்ளைமை அறிவு நிரம்பாத பிள்ளைப் பருவம். விழைவு - விருப்பம். பலன் திரிய - பலனின்றி, தம்மோடுடன் பயின்ற உவெஸ்டு என்னும் அரிய நண்பர் இறந்துபட்டமையின் கிரே என்பவருக்கு இவை பயனிலவாகக் காணப்பட்டன. கொழுவிய - உண்டாகிய; பழனம் - வயல், சிறார் விளையாடு மிடனெனினும் அமையும், Field.

கால் - காற்று. உயங்கும் - இளைத்த, வாடிய. அல்லல் – துன்பம்.

இச் செய்யுண்முதலடி யிரண்டும் முதனூலிலில்லனவாயினும், செய்யுளும் பொருளும் நிரம்பல் வேண்டிப் படைத்து எழுதப்பட்டன. பொதுளல் நிறைதல். தாது - மகரந்தம். களி - மகிழ்வு.

முதனூலாசிரியர் தெம்ஸ் யாற்றைத் தந்தையென அழைப்பராயினுஞ் செந்தமிழ் வழக்குக் கேற்பப் பெண்பாலாக வுரைக்கபட்டது காவிரியாறென்க. ஆடியவாறு - ஆடியபடியே. கொழுந்தோள் - Pliant arm. திரை - அலை. போழ்தல் - இரு கூறாக்குதல்.

மிழற்றல் - பாடல். பூவை - நாகணவாய்ப்புள், இதனை இக்காலத்து 'மயினா' என்று வழங்குப. முதனூலிற் கண்ட லின்னெட் (linnet என்னும் இசையறி பறவைக் கேற்ப ஈண்டுப் பூவை எனப்பட்டது. பொறி - கண்ணி, Trap. வளையம் - Hoop.

வெளியே திரிவதற்கென்று குறித்த காலத்தை இனிதாக்கும் பாடவேளை என்க. சிறார் பாடம் பயிலும்போது முறுமுறு வென்று ஒலித்தலின் அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/84&oldid=1580041" இலிருந்து மீள்விக்கப்பட்டது