உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

-

மறைமலையம் – 11 11 ✰

(இ-ள்) முகை அவிழ்க்கும் தாமரையின் - அரும்பாயிருந்த பதத்தினின்று அலருந் தாமரை மலரின்கண் உள்ள, முதிர் மணத்தின் அளைந்து மிக்க மணத்திலே தோய்ந்து, மிகைபடுநீர் மாலினியின் - மிகுதியாய் ஓடும் நீரினையுடைய மாலினியாற்றின், விரிதிரை நுண்துளி வீசும் - அகலமான அலைகளினால் எறியப்படுஞ் சிறிய நீர்த்துளிகளை வாரிக்கொணர்ந்து மென்மைத் வீசாநின்ற, தகை இனிய இளம் தென்றல் தன்மையால் இனிதாகிய முதிராத தென்றற் காற்றானது, தனிக்காம எரி வெதுப்பும் ஒப்பற்ற காமமாகிய தீயினால் வாட்டப்படும், தொகை உடம்பில்

-

6

-

எழுவகை முதற்

- -

கெடாத

பொருள்களின் தொகுதியாகிய உடம்பினால், தழுவுதற்கு அணைத்தற்கு, தொலையாத வளம் உடைத்து சழுமையினை யுடையதாகும் என்றவாறு. ஏ: அசை. விழிகளாற் பெறூஉம் அழிவில்பே ரின்பம் ஆஅ! பெரி தெய்தினென் மாதோ, தூஉய ஒண்மலர் தாஅய வெண்ணிறக் கன்மிசைத் தோழியர் மருங்கிற் சாஅய என்

-

இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுற லானே.

-

-

-

(11)

(இ-ள்) விழிகளால் பெறூஉம் கண்களைப் பெற்றதனால் அடையும், அழிவு இல் பேர் இன்பம் கெடுதல் இல்லாத பேரின்பத்தினை, ‘ஆ’! வியப்பிடைச் சொல், பெரிது எய்தினென் மிகவும் பெற்றேன், 'மாது' 'ஓ': அசைநிலை, தூ உய பரிசுத்தமான, ஒள்மலர் - ஒளி பொருந்திய பூக்கள், தாஅய வெள்நிறம் கல்மிசை பரவிய வெண்ணிறம் வாய்ந்த கல்லின்மேல், தோழியர் மருங்கில் சாஅய - தன் தோழிமாரின் பக்கத்தே சாய்ந்து கிடக்கும், என் இன் உயிர்ச்செல்வியைக் கண் உறலான்- எனது இனிய உயிர்க்குச் செல்வமாயிருப்பவளைக் காண்டலினால் என்க; ஏ ; அசை, ‘என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்உறலான் விழிகளாற் பெறூஉம் அழிவில் பேரின்பம் ஆ அ அ பெரிதெய்தினென்' என வினைமுடிவுசெய்க.

-

நறுமண நரந்தம் நகிலமேற் றிமிர்ந்துந் தாமரை நாளங் காமரு கையிற்

பவளக் கடகமெனத் துவள வளைத்தும் என், ஆருயிர்க் காதலி ஓரயர் வுறினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/99&oldid=1580056" இலிருந்து மீள்விக்கப்பட்டது