உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

இலவாம் பொய்யே; எம்போல் வார்க்கவ் வெழின்மதியம் உலர்வெந் தீயே பொழியும் உறுதண் ஒளியாலே.

6

65

(8)

(இ-ள்) மலரைக் கணையாய் உடையாய் என நீ வருதலும்- பூக்களைக் கணைகளாகப் பெற்றாய் என நீ வழங்கப்பட்டு வருதலும், அலர்தண் கதிரோன் அவன் என்று அறையும் அவ் உரையும் - விரிந்த குளிர்ச்சியான கதிர்களையுடைய மதியோ னாகிய அவன் என்று எங்குஞ் சொல்லப்படும் அச் சொல்லும். இலஆம் பொய்யே - என்றும் இல்லாதன ஆன வெறும்பொய்யே யாகும், எம் போல்வார்க்கு எம்மைப்போற் காமநோய் கொண்டார்க்கு; அவ் எழில் மதியம் - அவ் எழுச்சியினையுடைய திங்களானது, உலர் வெம் தீயே பொழியும் யாம் காய்தற்கு ஏதுவான வெவ்விய நெருப்பையே சொரியும். உறு தண் ஒளியால் - மிகுந்த தண்ணிய ஒளியினால், என்றபடி. ஏ : அசை.

-

-

-

நீயோ மலர்வெங் கணையை இடிபோல் நிறைக்கின்றாய்! ஆவா மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக ஓவாது எனைநீ புடைக்கின் றமையால் உயர்மீனப் பூவார் கொடியாய்! என்னாற் புகழப் படுவாயே.

-

(9)

இடிபோல்

(இ-ள்) நீயோ மலர் வெம்கணையை நிறைக்கின்றாய் - நீயோ பூக்களாகிய கொடிய அம்புகளை இடியை யொப்ப எம்மீது ஏவி நிரப்புகின்றாய், ஆ ஆ மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக ஐயோ எம்மை மயக்கும் பரந்த விழிகளையுடைய அம் மங்கையின் பொருட்டாக, ஓவாது எனை நீ புடைக்கின்றமையால் - ஒழியாது என்னை நீ நின் கணைகளால் அடிக்கின்றதனால், உயர் மீனம் பூ ஆர் கொடியாய் - உயர எடுத்ததும் மீன்வடிவு எழுதப்பட்டதும் பொலிவு நிறைந்ததுமான கொடியினை உடையாய், என்னால் புகழப்படுவாய் - என்னால் நீ புகழ்ந்து பேசப்படுவாய், என்றபடி;

ஏ:அசை.

முகை அவிழ்க்குந் தாமரையின் முதிர்மணத்தின் அளைந்து மிகைபடுநீர் மாலினியின் விரிதிரைநுண் டுளிவீசுந் தகையினிய இளந்தென்றல் தனிக்காம எரிவெதுப்புந் தோகையுடம்பிற் றழுவுதற்குத் தொலையாத வளமுடைத்தே.

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/98&oldid=1580055" இலிருந்து மீள்விக்கப்பட்டது