உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் – 11 11 ✰

விரிகட லடியிற் புதைந்தவெந் தழல்போல் வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழுந்தீ நினதுஅகத்து எரிகின்றதால்; பொரிபட வெந்துசாம்பர்ஆ யினையெனிற் பொறாதஇடர் புரிவாய்!எமை வெதுப்பல் எவ்வாறுனக்குப் பொருந்தியதே?

(6)

-

(இ-ள்) விரிகடல் அடியில் புதைந்த வெம்தழல் போல் - அகன்ற கடலின் அடியிலே ஆழ்ந்து கிடக்கின்ற கொடிய தீயைப்போல், வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழும் தீ சினங்கொண்ட சிவபிரானது நெற்றியிலுள்ள அழற்கண் கக்கிய மிக்கநெருப்பு, நினது அகத்து எரிகின்றதால் - நின்னை எரித்து விடாமல் நின்னுள்ளே எரிந்து கொண்டிருக்கின்றது போலும், பொரிபட வெந்து சாம்பர்ஆயினை எனில் - அவ்வாறின்றிப் பொரியாகத் தீய்ந்து சாம்பலாய் விட்டனையாயின், பொறாத இடர் புரிவாய் - தாங்கல் முடியாத துன்பத்தைச் செய்பவனே, எமை வெதும்பல் - எம்மை நினது கொடுந் தீயிலிட்டு வாட்டல், எவ்வாறு உனக்குப் பொருந்தியது - எங்ஙனம் உனக்குக் கூடியது, ஏ - அசைநிலை.

பூங்கணை வாய்ந்த புத்தேள்! நீயும் புதுமதியும் ஈங்குள மக்கட் கின்பந் தருவீர் எனஎண்ணி ஏங்கிய காதலர் எல்லாம் ஏமாந் தனரானார். தாங்காக் காதல் என்போன் மாந்தர் தளர்வாரே.

(7)

(இ-ள்) பூங்கணைவாய்ந்த புத்தேள் - பூவாகிய அம்பினைப் பெற்ற காமதேவனே, நீயும் புதுமதியும் - நீயும் முதிராத நிலவும், ஈங்கு உளமக்கட்கு - இந் நிலவுலகத்துள்ள மக்களுக்கு, இன்பந் தருவீர் என எண்ணி ன்பத்தினை விளைக்குந் தன்மை

-

தாம்

யுடையீரெனக் கருதி, ஏங்கிய காதலர் எல்லாம் காதலித்தவரைப் பெறாமையால் ஏக்கமுற்ற காதலர் எல்லாரும், ஏமாந்தனர் ஆனார் ஏமாற்றம் அடைந்தவராயினார்கள்; தாங்காக் காதல் பொறுத்தற்கரிய காதலன்பின் வயப்பட்ட என்போல் மாந்தர் - என்னை யொத்த மக்களோ, தளர்வார் - தாம் பிழைக்கும் வழி காணாமையின் உள்ளஞ் சோர்வா ரென்றபடி.

மலரைக் கணையாய் உடையாய் எனநீ வருகுதலும் அலர்தண் கதிரோன் அவனென் றறையும் அவ்வுரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/97&oldid=1580054" இலிருந்து மீள்விக்கப்பட்டது