உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

மோவா மலரோ நகங்களை யாத முழுமுறியோ ஆவா! கருவி துருவாது பெற்ற அருமணியோ நாவாற் சுவையாப் புதுநற வோசெய்த நற்றவங்கள் தாவா தொருங்கு திரண்டுவந் தாலன்ன தையலரே.

-

63

(4)

(இ-ள்) செய்த நல்தவங்கள் - மேலைப் பிறவிகளிற் செய்த நல்ல தவத்தின் பயன்கள், தாவாது அழியாமல், ஒருங்கு திரண்டு வந்தால் அன்ன ஒன்று சேர்ந்து ஓர் உருவாய்த் திரண்டு வந்ததை யொத்த, தையலர் - இம் மாதரார், மோவா மலரோ - மூக்கால் மோந்த பூ வாடிப்போதலால் இதுகாறும் ஆடவர் எவர் மூச்சும்படாத பூவோ, நகம் களையாத முழு முறியோ - பிறர் எவரது நகமும் படாமையின் நகத்தாற் கிள்ளப் படாத முழுத் துளிரோ, ஆவா - ஆஆ; இது வியப்பினைக் காட்டும் இடைச் சொல், கருவி துருவாது பெற்ற அருமணியோ ஊசியால் தொளைக்கப்படாமற் பெற்றுக்கொண்ட விலையிடுதற்கரிய ஒன்பது மணிகளுள் ஒன்றோ, நாவால் சுவையாப் புது நறவோ - பிறரெவரது நாவினாலுஞ் சுவைக்கப்படாத புதிய தேனோ, இன்னதென்று நுகர்தல் அனுபவித்தல்.

கூறுகில்லேன்

களிவளர் கடவுளாங் காம தேவனே!

என்றவாறு,

எளியன்மேற் சிறிதுநீ இரங்கல் இல்லையால்; ஒளிவளர் மலர்க்கணை உறப்பொ ருந்துநீ

அளியிலை கொடியைஎன் றாய தென்கொலோ!

-

-

(5)

-

(இ-ள்) களிவளர் மகிழ்ச்சியின் மிகுதிப்படுத்துகின்ற அல்லது மகிழ்ச்சி மிக்க அல்லது காம மயக்கத்தை வளர்க்கின்ற அல்லது செருக்குமிக்க, கடவுள் ஆம் தெய்வமாகிய, காம தேவனே, எளியன் மேல் - நின் வலிமைக்குச் சிறிதும் ஒவ்வாத ஏழையேன்மீது, சிறிதும் நீ இரங்கல் இல்லையால் - சிறிதாயினும் நீ நெஞ்சம் இரங்குகின்றிலை, ஒளிவளர் மலர்க்கணை- நிறம் மிகுந்த பூக்களாகிய அம்புகளை, உறப்பொருந்தும் நீ நிரம்பவைத்திருக்கும் நீ, அளிஇலை - அருள் இலாய் என்றும், கொடியை என்று - கொடுங்குணம் உடையை யென்றும், ஆயது- - எம்மையொத்தார் சொல்லும்படி ஆனது, என்கொலோ - ஏது காரணமோ என்றபடி.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/96&oldid=1580053" இலிருந்து மீள்விக்கப்பட்டது