உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

-

-

11

மறைமலையம் – 11

-

(இ ள்) புள்ளிவிளங்கு - வெண்புள்ளிகளுடையதாய்த் திகழும், பொன்மான் - பொன்னிறமான மான் ஆனது, உடன் பயின்ற - தன்னுடன் பழகிய, வள்ளைச் செவியாள் - வள்ளைத் தண்டை யொத்த காதினையுடையளாகிய, என்மாதர்க்கொடி தனக்கு எனக்குக் காதலை விளைக்கும் பூங்கொடி போல் வாளான சகுந்தலைக்கு, தெள்ளுமடநோக்கம் - தெளிவுடைய தாய்க் கள்ளமறியாத பார்வையினை, தெருட்டியதால் கற்பித்தமையால், மற்று அதனை - அத்தகைய மானை, உள்ளி எய்வதற்கு எண்ணி, கணை தொடுத்தும் - அம்பை வில்நாணில் தொடுத்தும், உய்த்திட நான் மாட்டேன் - அதனைச் செலுத்து தற்கு நான் முடியாத வனாயிருக்கின்றேன்; ‘ஆல் - அசை. “மாதர் அசை."மாதர் காதல்” (தொல்காப்பியம் உரியியல், 32.) 'என்மாதர்க்கொடி’ என்பதற்கு எனக்கு உரியளாகிய இப்பெண்கொடிக்கு என்று பொருளுரைப்பினும் ஆம. சகுந்தலையின் அழகிய பார்வையும் மானின் இனிய பார்வையும் ஒன்றாயிருத்தலின், அவளை யொத்த மானை வேட்டம் ஆடுதலில் அரசனுக்கு உள்ளஞ் செல்லவில்லை யென்பது கருத்து.

ஓவிய மாக எழுதிய பின்னை யொருமுதல்வன்

ஆவி புகுத்தி விடுத்தன னோவன் றழகையெல்லாந் தாவி மனத்தாற் றிரட்டின னோவவன் றன்வலிவும்

பூவை யுருவும் நினையிற்பொன் னாளோர் புதுமையன்றே?

-

(3)

இ-ள்) ஓவியம் ஆக சித்திரத்திலுள்ள ஓரழகிய வடிவமாக எழுதிய பின்னை வரைந்தபிறகு, ஒரு முதல்வன் - ஒப்பற்ற தலைவ னாகிய நான்முகக் கடவுள், ஆவிபுகுத்தி - அவ் வடிவத்தினுள்ளே உயிரை நுழைத்து, விடுத்தனனோ - அதன்பின் அவளை இந் நிலவுலகத்திற் பிறப்பித்தனனோ, அன்று - அன்றி, அழகை யெல்லாம் ஒவ்வோர் உறுப்புகளின் அழகுகளையெல்லாம், தாவி -மனத்தாற் பரந்து ஆராய்ந்து, திரட்டினனோ - ஒருங்கு சேர்த்துச் செய்தனனோ, அவன் தன் வலிவும் - நான்முகனது கிளியை படைப்புத்தொழிலின் திறமும், பூவை உருவும் யொத்தாளின் உருவச்சிறப்பும், நினையின் - ஒப்பவைத்து நினைப்பின், பொன்னாள் - இலக்குமியைப்போன்ற சகுந்தலை, ஓர் புதுமை யன்றே இதுகாறும் எங்குங் காணப்படாத ஒரு

வியத்தகு படைப்பன்றோ என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/95&oldid=1580052" இலிருந்து மீள்விக்கப்பட்டது