உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

61

15

சாகுந்தல நாடகம்

நடியின் கூற்று

விரியு மணமவிழ்க்கும் மலர்முகிழ்மே லெல்லாங்

கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்! எரியுந் தளிர்ப்பிண்டி யிணர்கிள்ளி யோடுங் கரியவிழி மாதர் காதிடலுங் காணாய்!

காணாய்

-

(1)

-

(இ-ள்) விரியும் மணம் அவிழ்க்கும் - எங்கும் பரவாநின்ற மணத்தை அவிழச்செய்யும்; மலர் முகிழ்மேல் எல்லாம் பூவரும்புகளின் மேலிடங்களை எல்லாம், கரிய வரிவண்டு - கரிய நிறமும் இறக்கைகளில் வரியும் உடைய வண்டுகள், முத்தம் இடல் முத்தம் இடுதலை ஒப்ப வாயால் தொடுதலைப் பார்ப்பாயாக, எரியும் தளிர்ப்பிண்டி இணர் கிள்ளி - தீ எரிவதனை யொப்பச் சிவந்து தோன்றுந் தளிர்களையுடைய அசோக மரத்தின் பூங்கொத்துகளைக் கிள்ளி, ஓடும் கரியவிழி மாதர் காதளவும் ஓடாநின்ற நீண்ட கரிய கண்களையுடைய மடந்தையர், காது இடலும் காணாய் - தம்முடைய காதுகளிற் செருகுதலையும் பார்ப்பாயாக.

-

அரசன் கூற்று

புள்ளி விளங்கு பொன்மான் உடன்பயின்ற வள்ளைச் செவியாளென் மாதர்க் கொடிதனக்குத் தெள்ளு மடநோக்குந் தெருட்டியதால் மற்றதனை

உள்ளிக் கணைதொடுத்தும் உய்த்திடநான் மாட்டேனால்.

(2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/94&oldid=1580051" இலிருந்து மீள்விக்கப்பட்டது