உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் – 11

மாறா நிலையும் மலையுஞ் செயல்தானும்

வேறாதல் கண்டு விளம்பு.

அடிக்குறிப்புகள்

(10)

1.

2,

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

இருவகை - செல்வநிலை, வறியநிலை. திருவேறு தெள்ளியராதலும் வேறு என்றலும் ஒன்று. ஊழ் - ஊழ்வினை. ஊழ் என்றது ஏன்ற வினையை. மெய்ம்மையார் - மெய்யுணர்ந்த மேலோர். விதந்து - சிறப்புறச் சொல்லி பின்றைநாள் - பின்னாள். ஓர் அறிஞன் பின்னும் பலநாள் வாழக்கூடும் என்றுபேசினால் வாழ்வோருக்கு முயற்சிகளில் ஊக்கம் மிகும் என்பது அடிகளார் கருத்து.

-

இரண்டு - நல்வினை, தீவினை (அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்கள்) தேர்ந்தோர் - ஆராய்ந்து தெளிந்தவர்கள். முரண்டு மாறுபட்டு. மறார் - மறுக்கமாட்டார்.

இயல்நெறி -இயற்கையொடு ஒத்துவாழும் நெறி. ஏற்க - அவ்வழியொடு பொருந்த. அம்மை - மறுபிறப்பு. ஆர்ந்து - நிறைந்து.

செம்மையே - சிறப்பாக; இம்மையில் நல்வினை செய்தோர் மறுமையில் இன்புற்று வாழ்வர் என்பது கருத்து.

வாழ்த்து முறை - என்று முன்னோர் வாழ்த்திய வகையில். தேர்ந்த பயன் - கற்றறிந்ததனால் உண்டாகும் பயன்.

இறையும் - சிறிதும். குறையாம் கறை குறையாகிய இழுக்கு. இன்ப துன்பங்களுக்கு நாம் செய்யும் வினையே காரணம் என்பது கருத்து. கறை இல்லை என்பதற்குக் 'கறை யேது' என்றார். இவன் செயலே கறை என்பதற்கு 'இவன் செயலல்லால்' என்றார்.

மிகத் தெரிந்து -நன்றாக ஆராய்ந்து. அகத்தும் புறத்தும் - உள்ளும் புறமும். அமைப்பு என்றது உறுப்புகளின் பொருத்தத்தை.

மாறா நிலையும் - நிலைத்த நிலையும். மலையும் செயல்தானும் - அதனோடு மாறுபட்டழியும் நிலையாமைச் செயல்களும். கண்டு அறிந்து. விளம்பு - அவற்றின் இன்றியமையாமை கருதிக் கருத்துக்களைச் சொல்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/93&oldid=1580050" இலிருந்து மீள்விக்கப்பட்டது