உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

59

14

வாழ்க்கைக் குறள்

இது பல்லவபுரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் குறட்பாவில் இயற்றிய

நூல்.

வாழ்க்கை இருவகைத்தா மாந்தர்பாற் றோற்றுவிக்கும்

ஊழ்க்கு நிகரே துரை.

(1)

இம்மையே யன்றி இனிச்சேர் மறுமையும்

மெய்ம்மையார் கண்டார் விதந்து.

(2)

இன்றிருக்கும் ஓரறிஞன் நேற்றிருந்த தன்றியே

பின்றைநா ளும்மிருத்தல் பேசு.

(3)

இரண்டுந் தொடர்ந்தே இயங்குமுறை தேர்ந்தோர்

முரண்டு மறுமை மறார்.

(4)

இம்மை இயல்நெறியை ஏற்கத் திருத்தினால்

அம்மை யியல்சிறக்கும் ஆர்ந்து.

(5)

இம்மை யொழுக்கம் இனிது நிகழாக்கால்

செம்மையே வாழா ருயிர்.

(6)

மாந்தர்க்கு நூறாண்டு வாழ்த்துமுறை வாழாக்கால்

தேர்ந்தபயன் உண்டே தெரி.

(7)

இறைவன் படைப்பில் இறையுங் குறையாங்

கறையே திவன்செயலல் லால்.

(8)

அகத்தும் புறத்தும் அமைந்த அமைப்பை

மிகத்தெரிந்து செய்க வினை.

(9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/92&oldid=1580049" இலிருந்து மீள்விக்கப்பட்டது