உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

3.

4.

5.

58

6.

7.

8.

9.

10.

மறைமலையம் – 11 11 ✰

இரவிற் பாடும் புள் - Nightingale. கோடை – மெல்லிதின் வீசும் மேல்காற்று. பரிய அரை - பெருத்த அடி; அரை - Trunk. பொகுட்டு - கரடு முரடு. செவிரம் - பாசி. அதர் - காட்டுவழி; Glade. கலைமகள் - Muse. புறம் இடைதல் - முதுகு சாய்தல். மருதநிலமக்கள் - நாகரிக மில்லாத நாட்டுப்புறத்தார்; Rustics. மன்பதை - மக்கட்பரப்பு. உழவுத் தொழில் செய்வோர் வேனிற்காலத்தில் வறிதிருத்தலின் நாலாவது வரியில் அவ்வாறு சொல்லப்பட்டது.

வேனிற்காலத்து உழவு நடவாமையின் உழவுமாடு வறிதிருக்குமென்பதாம். அசைஇ - இளைப்பாறி. இக்காலத்துச் சில வறிதிருப்ப வேறு சில மிக அரிதினுழைப்ப தென்னென வியந்தவாறு. கறங்குதல் ஞிமிறு - ஒரு வண்டு. ஒளிப்புனல் - பேய்த்தேர்.

சுழலுதல். படாம் - போர்வை. நவை - குற்றம்; மேகத்தான் மறைபடுதல். விழிக்கும் தோன்றும்; விளங்கும் ; 'விழிப்பத் தோன்றா' என்பதனுள் இப்பொருட்டாதல் காண்க. தொடங்குழி - தொடங்கியவிடம். மறிதரல் - திரும்பிவரல். உஞற்றுதல் - அரிது முயலல். படம் - போர்வை போழ்தல் - ஊடறுத்தல்; எல்லாரும் வாழ்நாட் பரப்பை ஊடறுத்து விரைந்து வானுலகு செல்வரென்பதாம்.

இழவூழ் கேடுபயக்கும் விதி. கருங்கை -கொலைதொழிலிற் பழகிய கை; 'கொன்றுவாழ் தொழிலினும், வன்பணித் தொழிலினுங், கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படுமே' என்றாராகலின். அயர்வுயிர்த்தல் - இளைப்பாறுதல். ஈ ஈப்பறவை; a fly. எழில் - அழகு

இறால் தேனடை – உருவக வகையால் இன்பந்தரும் பொருட் டொகுதி மேனின்றது. கலவம் மயிற்றோகை; உருவகவகையாற் சிறந்த வுடைமேனின்றது. பரிதி - சூரியன். ‘நின்பரிதிபட்டது' என்பது வாழ்நாள் கழிந்ததென்பதனைக் குறிப்பானுணர்த் திற்று. இவ்விரண்டு பாட்டானும், உலகியற்பொருள் துறவுள்ளந் தோற்று விக்குமாகவும், அந்நுண்மை யறியமாட்டாதார் வேறுசில இன்பங்களையே பெரிதெடுத்துக் கூறுவரென முதனூற்புலவர் முடிவுரை கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/91&oldid=1580048" இலிருந்து மீள்விக்கப்பட்டது