உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

1.

பாமணிக் கோவை

விழவூரும் பெருமுதுமை யதனானோ

வெறியாட்டு முழுது நீங்கிப்

பழகூர வவர்பலரு மிரும்புழுதி

யாகியயர் வுயிர்ப்ப யாவு மெழவூறு மெமதுளத்தி லிடையறா

தக்காலை யெழுந்த வன்றே.

இனையபல வருமையெலா மினிதொளிர

விளவிளையாட் டொருசின் மாக்கள்

தினையளவு மவைநினையா ரெமைநோக்கி

யொழுக்கமறி சிறுமை யுள்ளா

யெனைவகையை யொருதனியீத் தனைநிகர்வை

யெழில்கிளரு மகளி ரோடு

ரு

நனைமகிழ்வு தலைசிறப்ப நலம்பருகி

யின்பமுறா நடையை மன்னோ.

வளங்கெழுநற் றெளிமதுவ முடன்றொகுத்த வளரிறா லுனக்கொன் றின்றால் துளங்கொளிகால் கலவநனி துலங்கவிரித்

தெழவொன்று சிறிது மின்றால்

இளம்பருவங் கடுஞ்சிறைகொண் டுயரவெழுந்

திறந்ததுநின் பரிதி பட்ட

துளர்வேனில் கழிந்ததினி விளையாட

வெழுதுமென வுரைத்தார் மன்னோ.

66

அடிக்குறிப்புகள்

Lubbuks's The Use of Life"

57

(8)

(9)

(10)

இப்பாட்டு ஞானபோதினி தொகுதி 4. பகுதி 11 இல் வெளியிடப் பெற்றது. முதனூலில் ‘வீனஸ்' (Venus) என்பதற்கேற்ப ‘இரதி' எனப்பட்டது. இரதி காமன் மனைவி. உயிர்கட்குக் காமவின்பத்தை நுகர்விப்பவள். 'வேனில்' முதலிய பருவங்களைப் பெண்களாகக் கூறுபடுத்தி ‘வீனஸ்' என்பவளுக்குத் தோழிமாராகக் கிரேக்கர் கூறுபவாகலின் அவ்வாறு சொல்லப்பட்டது. தமிழ் வழக்குக் கேற்பச் 'சாந்தம்' 'தாமரை' முதலியவாகச் சில திரித்துச் சேர்க்கப்பட்டவாறு காண்க. ஆண்டு வருடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/90&oldid=1580047" இலிருந்து மீள்விக்கப்பட்டது