உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

85

அம்பிகாபதி : (செய்யுட்களைப் படித்துப் பார்த்து) ஓ! இவை என் தங்கையின் கையெழுத்தாகக் காணப்படுகின்றனவே! நயினார் : ஆம், உன் தங்கையின் எழுத்தேதான். இப் பொழுதாயினும் அவளது மனநிலையினையும் எனது மனநிலையினையும் அறிந்தனையா?

அம்பிகாபதி:

ஆம், அவள் உன்மேல் அளவுக்கு மிஞ்சிய அன்பு பாராட்டுகின்றனள்; நீயும் அங்ஙனமே அவள் மேல் அன்பு பாராட்டுகின்றனை; அறிந்தேன்; அறிந்தேன்.

நயினார் : அற்றேல், நீ எங்களைப்பற்றி என்ன முடிவு செய்கின்றனை?

அம்பிகாபதி : எனக்கொன்றுமே தோன்றவில்லை. உன் கருத்தைத் தெரிவித்தால் நான் எண்ணுவதைச் சொல் கின்றேன்.

நயினார் : நின் தங்கையை நான் மணந்து கொள்ளவே விழைகின்றேன். அதற்கு நீ இணங்கவே வேண்டும்; நீ இணங்கா விட்டால் என்னை நீ உயிரோடு காணாய்.

அம்பிகாபதி : சீ. ஒரு பெண்ணுக்காக நீ நின் சிறந்த உயிரை மாய்க்கக் கருதுவது சிறிதுந் தக்கதன்று. காதலென்பது கட்டுக் கடங்காததா? நம் அறிவினால் அதனை அடக்குதலன்றோ ஆண்மை?

நயினார் : அபிகாபதி! என் ஆருயிர் நண்பா! காத லின்னதென்றே கண்டறியாத உன்னை நோவதிற் பய னில்லை. நீ வேறொன்றும் எனக்குச் சொல்லல் வேண்டாம். நின் தங்கையை எனக்கு மணஞ்செய்து கொடுக்கின்றனையா? இல்லையா? இரண்டிலொன்று சொல்!

அம்பிகாபதி: என் தந்தையார் ஊரிலில்லாத வேளையில் நீ இப்படி என்னை நெருக்கிக் கேட்டால் யான் எங்ஙனம் விடையளிப்பேன்? நீ என் தங்கையை மணப்பதென்றால் என் தந்தையார் முதலில் அதற்குடன் படல் வேண்டும். இரண் டாவது நின் தந்தையாரும் அதற்கு இணங்கல் வேண்டும். நீங்களோ சைவவேளாள குலத்தினர். யாங்களோ உவச்ச

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/118&oldid=1580720" இலிருந்து மீள்விக்கப்பட்டது