உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் 12

அம்பிகாபதி : அங்ஙனமாயின், நீ யாரைச் சாவக் கொடுத்தனை?

நயினார்: இல்லை, இல்லை, யான் எவரையுஞ் சாகக் கொடுக்கவில்லை. உயிரோடிருக்கும் ஒருவர் பொருட் ாகவே என்னுயிர் தத்தளிக்கின்றது.

அம்பிகாபதி : அவர் யார்? ஆணா? பெண்ணா?

நயினார்: அவர் ஓர் அழகிய பெண்.

அம்பிகாபதி: அப்பெண்ணிற்காக நீ ஏன் அவ்வளவு துன்புறல் வேண்டும்?

நயினார் : அவளைக் காணாமலிருக்க முடியவில்லை. கண்டாலோ அவளைக் கூடாமலிருக்க முடியவில்லை; என் செய்வேன்!

அம்பிகாபதி : அப்பெண் திருமணம் ஆகாதவளா யிருந்தால் அவளை நீ திருமணம் செய்துகொள்ளளாமே.

நயினார் : அவள் திருமணமாகாத கன்னிப்பெண்தான். உன்னைப் பார்த்தால் அவளைப் பார்ப்பது போலிருக் கின்றது.

அம்பிகாபதி : அற்றேல், அவளை நீ மணப்பதற்கு யான் டைநின்று செய்யக்கூடிய உதவியிருந்தாற் சொல். யான் எவ்வகையிலேனும் அதனைச் செய்து முடிப்பேன். நின் னினும் எனக்குச் சிறந்தார் யார்? நின் உயிர்வருந்த யான் காணேன்.

நயினார் : ஈது உறுதிதானா?

அம்பிகாபதி : எப்போதாயினும் யான் கூறிய சொல்லிற் பிழைத்ததுண்டா? என்னை வேறு நினைந்து பிழை செய்

யாதே!

நயினார் : இல்லை, இல்லை. நீ நின் வாய்மையில் என்றும் பிழைத்திலை. என் அச்சமே நின் வாய்மொழியை ஐயுறச் செய்தது. இதைப் பார்! (காவேரி விடுத்த திருமுக ஓலையை நீட்டுகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/117&oldid=1580719" இலிருந்து மீள்விக்கப்பட்டது