உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய்.

அம்பிகாபதி அமராவதி *

83

நயினார் : அதுதான் என்னால் தாங்கமுடியாத காதல்

அம்பிகாபதி: நண்பா! காதல் என்பது கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பிரியாநேசம் என்பதை நூல்களின் வாயிலாக அறிவேன். அது நோய்போற் சிலரைத் துன் புறுத்தும் என்பதும் புலவர்களின் பாக்களால் மிகுத்துக் கூறப்படுதலையும் அறிவேன். ஆனாலும், யானுங்காலஞ் சென்ற என்னருமை மனைவியும், அத்தகைய காதல் நோய்க்கு ஆளானதில்லை. அதனால், நீ சொல்லும் அந்நோயின் கொடுமை எனக்குச் சிறிதும் விளங்கவில்லையே!

நயினார் : அற்றேல், நீ நின் மனைவியைக் காதலித்த தில்லையோ?

அம்பிகாபதி : என் தந்தையாரால் எனக்கு மனைவி யாக அமர்த்தப்பட்டவளை யான் அன்புடன் நடத்தக் கடமைப் பட்டிருக்கின்றேன். அல்லேனோ?

நயினார் : அதை நான் அதை நான் கேட்கவில்லை. நீ நின் L மனைவியைக் காணாத நேரமுங் கூடாத நேரமும் உனக் கெப்படித் தோன்றின?

அம்பிகாபதி : வீட்டுக்குட் சென்றால் என் மனைவியை யான் காண்பது திண்ணமாதலால், அவளைக் காணா நேரத்தில் அவளை நினைந்திலேன்; ஆனால், அவள் இறந்து போனபோது அவளது பிரிவினை ஆற்றாது அழுதேன்.

நயினார் : ஓ! தமக்குரியவர் இறந்தால் எவரும் ஆற்றாது அழுகின்றனர்; அஃது இயல்பு; உன் மனைவி இறந்ததில் நின்னுயிர் தத்தளித்ததா? ஏங்கிற்றா?

அம்பிகாபதி : தத்தளித்தல், ஏங்குதல் என்னும் இரண்டு நிகழ்ச்சியையுஞ் சொல்லளவாயன்றி வேறு வகையில் அறிந்திலேன்.

நயினார் : அற்றேல், நீ காதலின் உண்மையைச் சிறிதும் உணர்ந்திலை; என்னுயிரோ காதலால் தத்தளிக்கின்றது. ஏக்கமடைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/116&oldid=1580718" இலிருந்து மீள்விக்கப்பட்டது