உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் 12

குயினாரும் பொழில்வளரும் மஞ்ஞைகாள் கூறுமினோ! கூடி வந்த

உயிரான என்றமையன் உளம்உவக்க ஒருப்படுக்கும் ஒழுங்கு காணேன்

துயிலாத விழியுடனே நயினாரை நினைந்தெனுளந் துயரு மந்தோ!

என்

ஆ! எத்தனைமுறை படித்தாலும் பின்னும் பின்னும் இவற்றைப் படிக்கவே என் மனம் விழைகின்றது! னுயிரே! காவேரி! நீ என்பால் உண்மைக்காதல் உடையை! அக்காதலைப் புலப்படுத்த நீ நின் தமையனுக்காகவே அஞ்சுகின்றனை! யானும், அவன் என்ன நினைப்பானோ, என்ன சொல்வானோ என்றே அஞ்சுகின்றேன். ஆயினும், என் ஆருயிர்க் காதலி! நின் மதர்விழிகளும் தேன் மொழிகளும் முன்னில்லாத ஒரு துணிவினை என்னுள்ளத்தே தோற்று விக்கின்றன! என்னச்சத்தை மீதூர்கின்றன! என் நண்பன் நின்னை எனக்கு ஈயானேல் என் உயிரை அவனெதிரில் மாய்த்துவிடுவேன்! இது திண்ணம்! இது திண்ணம்!

(திடுமென அம்பிகாபதி வருகின்றான்)

அம்பிகாபதி : (கடைசியிற் சொன்ன சொற்கள் மட்டுங் காதில் விழ) என் ஆருயிர் நண்ப! நின்னுயிரை மாய்த்து விடுவதாகச் சொல்லி ஏன் இவ்வளவு துன்புறுகின்றனை? உனக்கு யாது நேர்ந்தது? யான் அறியச்சொல்! சென்ற சில நாட்களாக நீ பாடஞ்சொல்ல வராமையால் நின்னுடம்புக்குக் கடுமையான நோய் ஏதேனும் உண்டோ என்று என் தங்கை மிக மனங்கவன்று வருந்துகின்றாள். யானும் அதனால் வருந்தியே நின் உடல்நலம் அறிய வந்தேன்.

நயினார்: (சிறிது நேரம் வாளா இருந்து முகங்கவிழ்ந்த படி யே) அருமைத் தோழ! என் மனநோயே என்னுடலையும் நோய்ப்படுத்துகின்றது!

L

அம்பிகாபதி : அத்தனை கொடிய மனநோய் யாதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/115&oldid=1580717" இலிருந்து மீள்விக்கப்பட்டது