உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

மூன்றாம் நிகழ்ச்சி : ஆறாம் காட்சி

களம் : அமைச்சர் நம்பிப்பிள்ளையின் பூந்தோட்டம்.

காலம் : விடியற்காலம்.

நயினார் பிள்ளை : (ஒரு பிண்டிமர நிழலிலிருந்து காவேரி விடுத்த சீட்டைப் பிரித்துப் படிக்கின்றான்)

இயலாருந் தமிழரசே! என்னுளத்தைக்

கவர்ந்தகள்வன் யாண்டு ளானென்

றயலாரும் அறியாமே ஆராய

அவனென்றன் நெஞ்சி னுள்ளே

செயலாரும் அறியாமே திறமாக

ஒளித்திருந்துஞ் சீரமைச்சர்

புயலாரும் மாளிகையிற் புக்கிருப்ப

னெனப்புகறல் புதுமை யன்றே!

என்னுளத்தி லவனிருக்க அவனுளத்தி

லியானிருத்த லியலு மோதான்

பொன்செறிந்த வாயுடைய பூவைகாள்! புகலுமினோ! போந்தெ னோடும்

முன்கிளைத்த தமையற்கும் என்றனுக்கும் உயிர் போல்வான் முடிவிலாத

அன்பிருக்க என்பொருட்டால் இருவருளம்

வேறுபட ஆற்று வேனோ?

நயினாரை யான் நயத்தல் என்றமையன் றானறிந்தால் நல்ல தாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/114&oldid=1580716" இலிருந்து மீள்விக்கப்பட்டது