உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் 12

அமராவதி : நல்லது! என் தந்தையார்க்குரிய கடனை நீங்கள் எவ்வாறு செய்துமுடிக்கக்கூடும்?

குலசேகரன் : யானே நின்னை மணந்துகொள்ள விரும்பு

கின்றேன்.

அமராவதி : யான் உங்களை மணப்பதில் விருப்ப மில்லாதிருக்க நீங்கள் எங்ஙனம் என்னை மணக்க விரும்ப

லாம்?

குலசேகரன் : நீ ஏன் என்னை மணக்க விரும்பலாகாது? நான் அழகில்லாதவனா? யான் நின்னிற் சிறிதுதானே மூத்த இளைஞன். செல்வமும் அரசர்க்குரிய ஆண்மையுங் கல்வியும் உயர் குடிப்பிறப்பும் யான் இல்லாதவனா? கூறு.

அமராவதி : மாமா! அங்ஙனமெல்லாம் நீங்கள் இல்லை யென்று யார் சொன்னார்?

குலசேகரன் : பின்னே ஏன் நீ என்னை மணத்தல் கூடாது?

அமராவதி : மணவிருப்பந் தானாகவன்றோ எனக்கு வரல் கொடுத்தால்

வேண்டும்? பசியில்லாதவனுக்கு உணவு

அஃதவனுக்கு நோயையன்றோ வருவிக்கும்? (குலசேகரன் விடைதர மாட்டானாயிருக்க) மணத்தைப் பற்றிப் பேசி வீண் பொழுது போக்குவதைவிட, யான் இயற்றிய செய்யுட்களை யாழிலிட்டு இசைக்கின்றேன்; கேட்டு மகிழுங்களே.

குலசேகரன் : (வருத்தமுஞ் சினமுமுடையனாய்) மணப் பேச்சுப் பிணப்பேச்சா? நின் இசைப்பாட்டைக் கேட்பதில் எனக்கு விருப்பமில்லை. இயல் இசை நாடகங்களில் வல்ல அழகிய மங்கையர் பலர் எங்கள் அரண்மனையிலிருக்கின்றனர்.

அமராவதி : (முகஞ் சிவந்து) அவ்வாறானால், அம் மங்கைமாரைவிட்டு நீங்கள் இங்கு வந்தது வீணேகாண்! அவர்கள் பால் விரைவிற் செல்லுங்கள்!

(குலசேகரன் போய் விடுகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/113&oldid=1580715" இலிருந்து மீள்விக்கப்பட்டது