உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

79

குலசேகரன் : அமராவதி! அங்ஙனங் கருதாதே, நம் பாண்டிநாடும் நம்பாண்டியர் குலமுந் தமிழுக்கே பிறந் தவை. யான் கலைப்பயிற்சியிற் கொண்ட ஆர்வஞ் சிறிதுந் தணிந்திலது. ஆனால், அரசவாழ்க்கையில் உள்ளவர்கட்கு முடி சூடுங்காலம் நெருங்குகையிற், படைக்கலப் பயிற்சியைத் தவிரக் கலைப்பயிற்சியைக் நேரம் இல்லாமற்

கைக்கொள்ள

போகின்றது! என் செய்யலாம்?

அமராவதி : அஃது உண்மைதான். அரச வாழ்க்கையே அல்லலுக்கிடமானது. என்போன்றோர்க்கு அரச வாழ்க்கை யினும் எளிய கல்வி வாழ்க்கையே இசைந்ததுஞ் சிறந்தது மாய்க் காணப்படுகின்றது.

குலசேகரன் : அரசவாழ்க்கையினுங் கல்வி வாழ்க் கையே சிறந்ததெனக் கருதி, கலைப்பயிற்சியிலேயே எல் லாருங் காலங்கழிப்பதானாற், கலைவாணரையும் மற்றைக் குடிமக்களையுங் காப்பார் யார்?

அமராவதி : என் கருத்து எல்லாருங் கல்வியிலேயே காலத்தைச் செலுத்த வேண்டுமென்பதன்று. கல்வியில் ழைவுமிக்கோர் கலைப்பயிற்சியிலும், அரசியலிற் கருத் துடையோர் அரசியலிலும் ஈடுபடுதலே நன்று. அது குறித்தே, என் போன்றோர்க்கு எனப் பிரித்துப் பேசினேன்.

குலசேகரன் : அப்படியானால், அரசன் மகளாகிய நீ ஓர் அரசன் மகனைத்தானே மணக்கவேண்டும். மற்றையோன் ஒருவன் எவ்வளவுதா ன் கல்வியில் மிக்கவனாயினும் அவனை மணத்தல் பொருந்தாதே. அதற்கென் செய்வாய்?

அமராவதி : கல்வியிலேயே கருத்தழுந்தி நிற்கும் யான் திருமணத்தில் உள்ளஞ் செல்லாதவளாயிருக்கின்றேன்.

குலசேகரன் நீ திருமணத்தைப்பற்றி நினையா விட்டாலும், மணங்கூடுதற்கேற்ற பருவத்தை அடைந்திருக்கும் உன்னை மணஞ்செய்விக்க வேண்டுவது நின் பெற்றோர்க்குக கடனன்றோ? அதற்காகவே நின் தந்தையார் என்னை இங்கே வருவித்திருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/112&oldid=1580714" இலிருந்து மீள்விக்கப்பட்டது