உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மூன்றாம் நிகழ்ச்சி : ஐந்தாங் காட்சி

களம் : அமராவதியின் கன்னி மாடம்.

காலம் : காலை பத்து நாழிகை; குலசேகர பாண்டியன் வருகின்றான்.

குலசேகரன் : ஏடீ! தத்தே! யான் வருவதாக ளவர சிக்குத் தெரிவி!

(தெரிவித்து வந்து அவனைப்போக விடுகின்றான்)

குலசேகரன் : இளவரசி நீடு வாழ்க!

அமராவதி : மாமா! வாருங்கள்! அமருங்கள்! நீங்கள் ஊரிலிருந்து வந்த பிறகு சிவபிரான் கோயிலிலேதான் ஒரு கால் உங்களைப் பார்த்தேன். பிறகு இன்றைக்குத்தான் உங்களைப் பார்க்கலாயிற்று. மதுரையிற் பாட்டன் பாட்டியிடமிருந்து சய்தி ஏதேனும் வந்ததா? நலமுடனிருக் கின்றார்களா?

அவர்கள்

குலசேகரன் : என் தந்தை தாயார் நலமாகவேயிருக் கின்றனர். வந்தநாள் முதல் நின் தந்தையாரும் யானும் யானைப் பந்தயங் குதிரைப்பந்தயம் மல்லரின் மற்போர் சிலம்பம் முதலிய விளையாட்டுகளைக் கண்டுகளித்து வந்தோம். சென்ற வெள்ளிக்கிழமை உன்னையும் உன் கலைப் பயிற்சியையுங் கோயிலிற் கண்டபிறகுதான் உன்னைப் பார்க்க வேண்டு மென்னும் அவா மிக்கெழுந்தது.

அமராவதி : மாமா! உங்களுக்கு யானையேற்றங் குதிரை யேற்றம் முதலியவைகளில் ஆர்வம் உள்ள அளவுக்குக் கலைப் பயிற்சியில் ஆர்வம் இல்லை போல் தோன்றுகின்றதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/111&oldid=1580713" இலிருந்து மீள்விக்கப்பட்டது