உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

77

காவேரி : அண்ணா! ஆசிரியர் இந்த நிலைமையில் தனியே செல்லல் ஆகாது. யாராவது யாராவது அவருடன்

வீடு யாகச் செல்லல் வேண்டும்.

றேன்.

துணை

அம்பிகாபதி : யானே துணையாகப் போய் வருகின்

நயினார் : வேண்டாம் அம்பிகாபதி! நீயும் அரண் மனைக்குப் போய் வந்தமையாற் களைப்பாகவே காணப் படுகின்றாய்!

6

காவேரி : (நயினார்க்குக் கண்ணாற் குறி செய்து) அண்ணா! என் தோழி பச்சையே அவருடன் துணையாய்ப் போய் வரட்டுமே.

அம்பிகாபதி : அப்படியானால் அவள் நயினாருடன் போய்வர ஏற்பாடு செய்!

(காவேரி அப்பாற் போய்ச் சிறிதுநேரஞ் சென்று தோழியுடன் வந்து அவளைத் துணைவிடுக்க நயினார் அவளோடு வீடு செல்கின்றான்)

டு

நயினார் : (தன் வீட்டுள் நுழையுங்கால்) பச்சே! நீ என்னுடன் துணையாக வந்ததற்காக 6 உனக்கும் உன் தலைவிக்கும் என் நண்பனுக்கும் நன்றி செலுத்துகின்றேன். நீ செவ்வனே வீடு போய்ச்சேர்.

பச்சை : பெருமானே! இதை என் தலைவி உங்களிடஞ் சேர்ப்பிக்கச் சொன்னார்கள்!

(என்று ஓர் ஓலை நறுக்கை நீட்ட அவன் அதை மகிழ்வுடன் ஏற்க. அவள் அவனை வணங்கிப் போய்விடுகிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/110&oldid=1580712" இலிருந்து மீள்விக்கப்பட்டது