உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் -12

காவேரி : (அவன் சுட்டிக்காட்டியதனைப் பாராதவள் போல் எழுந்து) நான் இங்கிருப்பதனால் உங்கள் காதலியை அணுக அஞ்சுகிறீர்கள். நான் கீழே போய் வருகின்றேன். அவள் பாற் பேசி மகிழுங்கள் (என்று சொல்லிப்புறப்பட)

நயினார் : என் ஆருயிர்ப் பாவாய்! நீயே யன்றோ என் நெஞ்சிற் குடிகொண்ட அப்பெண்மணி? (என்று அவ ளாடையைப் பிடித்திழுக்க)

காவேரி : அடீ பச்சே! ஓடிவா! ஓடிவா! (என்று உரத்துக் கூவ, நயினார் பிள்ளை அச்சத்தால் நடு நடுங்கிச் சோர்ந்து சாய்ந்து விடுகின்றான்)

பச்சை : (ஓடிவந்து பதறி) அம்மா! என்ன நேர்ந்தது?

காவேரி : (மனங்கலங்கி) ஆசிரியர் எனக்கு நெடுநேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தமையாற் களைத்துச் சாய்ந்து விட்டார்! என் செய்வேன்! எனக்கு செய்வதென்று ஒன்றுந் தோன்றவில்லையே! (இச்சொற்கள் செவியில் விழுந்தவுடன் நயினார் அச்சந் தீர்கின்றான்)

யாது

பச்சை : அம்மா! அஞ்சாதே! இதோ குளிர்ந்த நீரும் மோருங்கொணர்ந்து அவரது களைப்பைத் தீர்த்து விடு கின்றேன். (அங்ஙனமே கொணர்ந்து நீரை முகத்தில் தெளித்து மோரைப் பருகக் கொடுக்கின்றாள். இதற்குள் அம்பிகாபதி வருகின்றான்)

அம்பிகாபதி : (பதைத்து) அம்மா காவேரி! நயினார் பிள்ளை ஏன் களைப்புற்றிருக்கின்றான்?

நயினார் : (முற்றுந் தெளிந்து) ஒன்றுமில்லை அம்பிகாபதி! இன்றைக்கு என் தந்தையாரிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தமையாலும் அதனை யடுத்துக் காவேரிக்கு இலக்கணப் பாடங் கற்பித்துக் கொண்டிருந்தமை ம யாலுஞ் சிறிது களைப்புற்றேன். இவ்விருவருஞ் செய்த உதவியாற் களைப்பு முற்றிலுந் தீர்ந்து விட்டது. நான் வீட்டுக்குப் போய் வருகின்றேன்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/109&oldid=1580711" இலிருந்து மீள்விக்கப்பட்டது