உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

75

விட்டாற், கட்டழகும் மனநலகுணநலங்களும் ஒருங்கு நிறைந்த நங்காய்! நின் காதலைப் பெறுதற்குத் தக்கார் எவருளரோ தெரியவில்லையே!

காவேரி : அத்தகையவரைத் தெரிந்து கொள்ளாதது உங்கள் குற்றமே.

(இது சொல்லி முகங் கவிழ்கின்றாள்)

நயினார் : (சிறிது மனங்கலங்கி) அவரை யான் எங்ஙனந் தெரிந்து கொள்வேன்?

காவேரி : (முகங்கவிழ்ந்தபடியே புன்முறுவல் செய்து) இக்கேள்வியினை என்னைக் கேளாதீர்கள்; உங்கள் நெஞ்சை நோக்கிக் கேளுங்கள்!

நயினார் : (சிறிது நேரம் வாளா இருந்து) ஆம்! பெண் மணி! சென்ற பதி னைந்து நாட்களாக என் நெஞ்சக் கண்ணாடியில் மறக்கொணாப் பேரழகு வாய்ந்த ஓர் இளம் பெண்ணின் உருவம் இடைவிடாது தோன்றி என்னை வாட்டி வருத்திக் கொண்டேயிருக்கின்றது! என் செய்வேன்!

காவேரி : என்செய்யவேண்டும்? அப்பெண்ணின் ருவத்தை யொத்தவள் எவள் வெளியேயிருக்கின்றனளென்று தேடிக் கண்டுபிடியுங்களேன்.

நயினார் : அவனை யான் தேடிச் செல்லவேண்டுவதில்லை. மிக்க அண்மையிலே தான் இருக்கின்றனள். ஆனாலும், அவளது மனநிலையினைத் தெரியாமல் அவளை அணுக என் உள்ளம் நடுங்குகின்றது!

காவேரி : அப்படியானால் அவள் இருக்குமிடத்தை மன நிலையினைத் தெரிந்து

நருங்கி

அவளது

காள்ளுங்களேன், அவள் எங்கிருக்கின்றாள்?

நயினார் : இதோ, இங்கேதான் இருக்கின்றாள்.

(என்று காவேரியினையே சுட்டிக் காட்டுகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/108&oldid=1580710" இலிருந்து மீள்விக்கப்பட்டது