உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் 12

அழுக்காறு மிகுதியும் உடையனென்பது

குறிப்பால் அறிந்தேன். ஆயினும் புறத்தே அவர்பால் உண்மையன் புடையவன் போல் வந்து ஒழுகுகின்றான். எதன் பொருட்டு?

நயினார் : உன் பொருட்டே அரசச் செல்வமும் அழகும் வாய்ந்த அவ்விளைஞன் உன் பொருட்டு இங்கு வருவது உனக்கொரு பெரும் பேறன்றோ?

காவேரி : ஐயனே! அங்ஙனம் உரையாதீர்கள்! பொன்னை உருக்கித்திரட்டிய அழகுப் பாவை காண்பார்க்கு எவ்வளவு அழகாய் இருக்கின்றது! அதன் உடம்பே பொன்னானால் அதனின் மிக்க செல்வம் அதற்கு வேறுண்டோ? அரசிளை ஞனும் அதனையே போல்வன்; ஆனால், அவனுக்குயிர் உண்டு, பொற்பாவைக்கு அஃதில்லை.

நயினார் : ஓ! அவ்வாறாயின் அரசிளைஞன் நுண்ணறி வும் மென்குணங்களும் இல்லாதவன் ம் இல்லாதவன் என்று கருதுகின் றனையோ?

காவேரி : என் தமையனு

என் தமையனுடனிருந்து அவருடை விழுமிய குணநல அறிவு நலங்களிற் பழகிய எனக்கு அர சிளைஞனது கூட்டுறவு சிறிதும் இனியதாய்த் தோன்ற வில்லை. ஒரு மானானது தான் பயின்ற மான் கூட்டத்தையே நாடு மல்லாது, தனக்கு முரணான மறப்புலியின் சேர்க்கை யினை நாடுமோ?

நயினார் : அவ்வாறாயின் அவன் ஏன் அடுத்தடுத்திங்கு வந்தலைகின்றான்?

காவேரி : புதிதவிழ்ந்த முல்லை மலரின் நறுமணத்தை மி குதிப்படுத்த நினைந்து அதனைக் கசக்கி நிற்கும் புல்லறிவாளனைத் தெருட்டுவார் யார்?

நயினார் : அற்றேல், தன்மேற் காதல் கொள்ளும்படி அவன் உன்னை வலுக்கட்டாயம் பண்ணுகின்றனனோ! காதல் வலுக் கட்டாயத்தால் உண்டாவதன்று. வலுக்கட்டாயத் தால் உண்டாவது மனவெறுப்பே. அது போகட்டும். அழகும் அரசச் செல்வமும் உடைய இளைஞன் விக்கிரமனே நினது காதலைப் பெறுவதற்குத் தகுதியும் நல்வினையும் இல்லாதவனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/107&oldid=1580709" இலிருந்து மீள்விக்கப்பட்டது