உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

73

நயினார் : அமராவதி பேரழகி யென்பதை யான் அறி யேன். நினக்கு யார் சொன்னார்?

காவேரி : என் தந்தையாரே எனக்குச் சொன்னார். ஆனால், அதனை உன் தமையனுக்குச் சிறுதுந் தெரிவியாதே என்றும் வலியுறுத்திக் கூறினார்.

நயினார் : ஆ! அப்படியா! இப்போது எல்லாச் சூழ்ச்சி யும் பட்டப்பகல்போல் வெட்டவெளியாய் விட்டது.

காவேரி : ஐயனே! என்ன சூழ்ச்சி?

நயினார் : அமராவதி கைகால் சிறிது முடமானவள் என்றும், பார்வைக்கு அழகில்லாத முகத்தனள் என்றும், அதனால் அவளெதிரேயிருந்து பாடஞ் சொல்லாமல் அவளைத் திரை மறைவில் வைத்து அம்பிகாபதி பாடஞ்

சால்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றும் என் தந்தையார் சொன்னார். எனக்கும் அவர் உண்மையை மறைத்தது, அம்பிகாபதிக்கு யான் ஆருயிர் நண்பன் என்பதனாற் போலும்?

காவேரி : என் தமையன் றன் இயற்பெயர் கூடத் தெரியாமல் மறைவுப் பெயர் பூண்டு, திரைமறைவிலிருக்கும் இளவரசிக்குப் பாடங்கற்பிக்க ஏற்பாடு செய்திருப்பதை யான் முன்னமே அறிவேன்!

நயினார் : உன் தமையனே அதனை உனக்குத் தெரி வித்தனனோ?

காவேரி : என் தமையன் அதனைத் தெரிவிப்பதற்கு முன்னமே, என் தமையன்பால் டையிடையே வந்துபோம் அரசிளைஞன் விக்கிரமன் அதனை எனக்குத் தெரிவித்து, அம்மறைபொருளை எவருக்கும் வெளிவிடலாகாதென்று

உறுத்திச் சொன்னான்.

நயினார் :

அங்ஙனமாயின்

உனக்கும் அரசிளை

னுக்கும் நெருங்கிய உறவு உண்டாய்விட்டது போலும்!

காவேரி : அங்ஙனங் கருதிவிடலாகாது. அரசிளைஞன் என் தமையனின் எழில் நல அறிவு நலங்களைக்கண்டு அகத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/106&oldid=1580708" இலிருந்து மீள்விக்கப்பட்டது