உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் 12

தந்தையார் மகிழ்வுடன் கூறினார். உனது திறமையை எவர் தாம் பாராட்டாதிருப்பர்? உன்னைப்போற் பரந்த நூலறிவும் நுண்ணறிவும் இல்லாத யான் இயற்கையே கூர்த்த அறிவு வாய்ந்த நின் தங்கைக்குப் பாடஞ் கற்பிப்பது எனக்கே நாணமாயிருக்கின்றது.

அம்பிகாபதி : அங்ஙனம் உரையாதே. கற்பிக்குந் திறமையில் நீ சிறிதுங் குறைந்தாய் அல்லையென்றும், ஆனாலும் நின் திறமையை நீயே யறியாமற் கூசுகின்றனை என்றும் என் தங்கை பகர்கின்றாள். நீ இரு. நான் அரண் நீ மனைக்குப் போய் வருகின்றேன். (போய் விடுகின்றான்) (நயினார்மேன் மாளிகையிற் செல்லக் காவேரி தோழியுடன் போந்து)

காவேரி : ஆசிரியர்க்கு வணக்கம். இருக்கையில் அமருங்கள்! இன்றைக்கு நீங்கள் இவ்வளவு நேரஞ் சென்று வருவதற்கு இடையூறு ஏதோ? (தோழி போய் விடுகிறாள்)

நயினார் : சென்ற இரண்டு கிழமைகளில் என் தந்தை யார்க்கு இந்தப் பிற்பகலிற்றான் ஓய்வுநேரங்கிடைத்தது. நின் தமையன் இளவர அமராவதிக்குக் கற்பிக்கும் வகை களையும் யான் நினக்குக் கற்பிக்கும் வகைகளையும் விளக்கமாய்ச் சொல்லும் படி என் தந்தையார் கேட்டார்; அவற்றை விரிவாய்ச் சொல்லிவர நேரமாயிற்று.

காவேரி : ஏந்தல்! என் தமையன் இளவரசிக்குப் பாடஞ் சொல்லி வருவதில் எனக்கு மனவமைதியில்லை.

நயினார் : ஏன்? அதில் யாது தொல்லை?

காவேரி : இளவரசி சொல்லிமுடியாப் பேரழகியாம், அதனுடன் நுண்ணறிவும் முத்தமிழ்த் தேர்ச்சியும் வாய்ந்த வளாம். என் தமையனும் பேரழகுவாய்ந்தவர்; கல்வியில் நிகரற்ற புலமையுடையவர்; கூரிய அறிவினர்; கூரிய அறிவினர்; இன்குணத்தினர் என்பதை நீங்களே நன்கறிவீர்கள். இத்தகைய இருவரும் ஒருவரையொருவர் காண நேர்ந்தாற் க கொள்வரே என்று நடுங்குகின்றேன்.

பிரியாக்

காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/105&oldid=1580707" இலிருந்து மீள்விக்கப்பட்டது