உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

மூன்றாம் நிகழ்ச்சி : நான்காம் காட்சி

களம் : கம்பரது மாளிகை

காலம் : மாலை

(அம்பிகாபதி நயினார் பிள்ளையை வரவேற்கின்றான்)

அம்பகாபதி : வருக! வருக! நண்ப நயினார் பிள்ளை, நினது வருகைக்காகவே காத்துக் கொண்டிருந்தேன். யான் அரண் மனைக்குச் செல்லும் நேரம் அணுகுகின்றது. என் தங்கை காவேரியும் அவள் தோழி பச்சையும் நின்னிடம் பாடங்கேட்ப தற்காக மேன் மாளிகையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டிக்கின்றனர். இன்றைக்கேன் இவ்வளவு நேரங் கழித்து

வந்தாய்?

.

நயினார் : சென்ற பதினைந்து நாட்களாக என் தந்தை யார்க்குச் சிறிதும் ஒழிவில்லை. அரசன் பணிபுரிவதிலேயே ஈடுபட்டிருந்தார். இன்றைப் பிற்பகலிலேதான் அவர்க்கு ஓய்வு கிடைத்தது. நீ அமராவதிக்குப் பாடந் துவங்கியதிலிருந்து நடந்தவைகளையும். யான் நின் தங்கைக்குப் பாடஞ் சொல்லி வரும் வகைகளையும் விரிவாய்ச் சொல்லும்படி என்னைக் கேட்டார். யான் அவைகளைச் சொல்லி முடித்துவர நேரம் ஆயிற்று.

அம்பிகாபதி : யான் பாடஞ்சொல்லி வருவதைப் பற்றி அமராவதிக்கும் அவள் தந்தைக்கும் நல்லெண்ணம் உண்டா? நின் தந்தையார் யாது சொல்லினர்?

நயினார் : பாடஞ் சொல்லும் உனது திறமையைப் பற்றி அவ்விருவரும் மிகவும் பாராட்டிப் பேசியதாகவே என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/104&oldid=1580706" இலிருந்து மீள்விக்கப்பட்டது