உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

❖ LDMMLDMOED -12 →

குலசேகரன் : அதற்காக உங்களை மிகவும் வணங்கு கின்றேன். அமராவதியின் ஆடல் பாடல்களைக் கண்டு கேட்டுக் களிப்பதினும் வேறெனக்கியாது வேண்டும்?

(எல்லாரும் அம்மையப்பரைத் தொழுதபின் குருக்கள் அரசன் முதலியோர்க்கெல்லாம் திருநீறளித்து அமராவதிக்கு அஃதளிக்

கையில்)

குருக்கள் : முத்தமிழ்ச் செல்வமே! முத்தமிழையுமே முக்கண்ணாய்க் கொண்ட சிவபிரான் பிராட்டி திருவருளால் நீ நினக்கினிய காதலனை விரைவில் பெற்று இனிது வாழக் கடவாய்! (கடவுட்குப் படைத்த பூ பழம் முதலியன பெற்றுக் கொண்டு எல்லாரும் அரண்மனைக்கு ஏகிவிட்டனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/103&oldid=1580705" இலிருந்து மீள்விக்கப்பட்டது